Cauliflower Ghee Paratha - Butter Beans Gravy (காலிஃப்ளவர் நெய் பராத்தா - பட்டர் பீன்ஸ் கிரேவி )
காலிஃப்ளவர் நெய் பராத்தா
தேவை: கோதுமை மாவு, நறுக்கிய காலிஃப்ளவர் - தலா 1 கப், சீரகம் 1 டேபிள் ஸ்பூன், மிளகு 1 டேபிள் ஸ்பூன், ஓமம் - 1/2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பூண்டு பல் 4, மஞ்சள் தூள், கறிவேப்பிலை, கொத்துமல்லி - தேவைக்கு, நெய் மற்றும் உப்பு - தேவைக்கு.
செய்முறை: காலிஃப்ளவரை ஒரு 5 நிமிடம் கொதிக்கும் நீரில் இட்டு வடிகட்டிக் கொள்ளவும். சீரகம்,
ஓமம், மிளகு, காய்ந்த மிளகாய், பூண்டுப் பல் இவற்றைக் கடாயில் சிறிது வறுத்துக் கொள்ளவும். இவற்றுடன் காலிஃப்ளவர் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
கோதுமை மாவு, அரைத்த விழுது மற்றும் மஞ்சள் தூள், கறிவேப் பிலை, கொத்துமல்லி, நெய் மற்றும் உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்துகொள்ளவும். பராத்தா போல் நெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
No comments:
Post a Comment