Butter Beans Ginger (பட்டர் பீன்ஸ் நெய்கறி )
தேவை: பட்டர் பீன்ஸ் - 1 கப், சிறிய வெங்காயம் 100 கிராம், தக்காளி -2, மிளகாய்த் தூள் (அ) சாம்பார்ப் பொடி 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன், தனியாத் தூள் 1 டீஸ்பூன், கரம் மசாலாத் தூள் - 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்து மல்லி, உப்பு - தேவைக்கு, பட்டை+லவங்கம் ஸ்பூன், 1, நெய் - 2 டேபிள்
செய்முறை: கடாயில் 2 ஸ்பூன் நெய் விட்டு பட்டை லவங்கம் தாளித்து, பிறகு வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, பிறகு மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியாத் தூள்
இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலாத் தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். நன்கு வதங்கியவுடன், பட்டர் பீன்ஸ் போட்டு 2 கப் நீர் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். நன்கு வெந்ததும் அதில் கொத்துமல்லி சேர்த்து 1 ஸ்பூன் நெய் விட்டு இறக்கி விடவும்.
இப்போது சுவையான காலிஃப்ளவர் நெய் பராத்தாவும், பட்டர் பீன்ஸ் நெய் கறியும் ரெடி.
No comments:
Post a Comment