Black Tamarind Aviyal (கருப்பட்டி புளி அவியல் )
தேவை: பச்சை காய்கறிகள் - தலா 1/2 கப், தேங்காய்ப் பூ - 1 கப், கருப்பட்டி - சிறிது, சீரகம் - 1/2 டீஸ்பூன், மஞ்சள் பொடி 2 சிட்டிகை. சின்ன வெங்காயம் - 10, புளி - நெல்லிக்காய் அளவு (புளி பிடிக்காதவர் கள் தக்காளியைச் சேர்க்கலாம்). தாளிக்க: கடுகு, உ.பருப்பு - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை 2 ஆர்க்கு, நெய் - 1 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கு. வத்தல் பொடி - 2 டீஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: காய்கறிகளை புளிக் கரைசலில் வேகவைத்து முக்கால் வாசி வெந்ததும் தேங்காய், சீரகம், சின்ன வெங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து காய்கறியில் சேர்க்கவும். நல்லெண்ணெய் சேர்த்துக் கொதிக்க விடவும்.
பச்சைவாசனை போனதும் பூண்டு தட்டிப் போடவும். நெய்யில் தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து அவியலில் கொட்டவும். இதில் சிறிது கருப்பட்டி சேர்த்து சிறிது நேரம் வைத்திருந்து இறக்கவும்.
தனியாக சாதத்தில் நெய் கலந்து கருப்பட்டியைப் பொடி செய்து தொட்டும் சாப்பிடலாம். சாதத்தின் நடுவில் குழி பறித்து உருக்கிய நெய்யை ஊற்றி, அவியலைத் தொட்டு (ஒவ்வொரு உருண்டைக்கும்) சாப்பிட்டால் சாப்பிடும் முறையில் கூட சுவை கூடும்.
No comments:
Post a Comment