Carrot Batura - Sauce Sabzi (கேரட் பட்டூரா - சௌசௌ சப்ஜி )
கேரட் பட்டூரா
தேவை: கோதுமை மாவு 2 கப், புளித்த தயிர் - 1/2 கப், மசித்த கேரட் விழுது - 1 கப். சமையல் சோடா - 1 சிட்டிகை, உப்பு - தேவையான அளவு, நெய் - பொரிப்பதற்கு.
செய்முறை: கோதுமை மாவில், தயிர், சமையல் சோடா, உப்பு, கேரட் விழுது சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும்.
நான்கு மணி நேரம் மாவை ஈரத்துணியால் மூடி வெயிலில் வைத்துப் பொங்க வைக்கவும். பிறகு சின்னச் சின்ன பூரிகளாக வட்டமாக இட்டு, நெய்யை லேசாகச் சூடு செய்து அதில் பொரித்து எடுக்கவும். சப்ஜியுடன் சாப்பிடச் சுவையாக இருக்கும்.
No comments:
Post a Comment