Apple puree ( ஆப்பிள் கூழ்) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Friday, 16 July 2021

Apple puree ( ஆப்பிள் கூழ்)

Apple puree ( ஆப்பிள் கூழ்)


வயது குழந்தையின் 5 வது மாதத்தில் இருந்து தரலாம் வேகவைத்து மசித்த ஆப்பிள்:

தேவையானவை :

* ஆப்பிள் - பாதி அளவு செய்முறை:

ஆப்பிளை நன்றாக கழுவி தோல் சீவி துண்டுகளாக்கி விதைகளை நீக்கி கொள்ளவும். ஆப்பிளை விரும்பிய அளவில் வெட்டிக் கொள்ளுங்கள்.

இதனை நீங்கள் பல்வேறு முறைகளில் செய்யலாம்.. 1. ஆப்பிளை நீங்கள் ஸ்டீமர் கொண்டு ஆவியில் வேசுவைத்துக் கொள்ளலாம். இதன்மூலம் இதில்

உள்ள சத்துகள் வெளியேறாமல் இருக்கும்.

2. நறுக்கிய ஆப்பிள்துண்டுகளை பாத்திரத்தில் வைத்து அதனை தண்ணீர் நிரப்பிய குக்கரில் வைத்து 4 முதல் 5 விசில்கள் வரை விடவும்(இது ஆப்பிள் வகையை பொறுத்து மாறுபடும்).

3. ஒரு பாத்திரத்தில் ஆப்பிள் துண்டுகளை வைத்து அதை தண்ணீர் நிரப்பிய பாத்திரத்தில் வைத்து நேரடியாக வேக விடவும்.

இவ்வாறு நீங்கள் வேகவைத்த ஆப்பிளை மசித்தோ அல்லது மிக்ஸியில் அரைத்தோ கொடுக்கலாம்.

குழந்தைகள் எளிதாக சாப்பிடும் வகையில் தாய்ப்பால் அல்லது பார்முலா மில்க் சேர்த்து தரவும்,

நன்றாக சுத்தம் செய்யப்பட்ட பாத்திரத்தில் இதனை வைத்து குழந்தைக்கு தரவும்.
தெரிந்து கொள்ள வேண்டியது:

ஆப்பிளை வேகவைத்தும், மசித்தும் அல்லது அப்படியே அரைத்தும் தரலாம்.

மசித்த ஆப்பிள் அல்லது ஆப்பிள் கூழ் மலச்சிக்கலை ஏற்படுத்தும்

ஆனால் ஆப்பிள் ஜூஸ் மலச்சிக்கல் பிரச்சினையை தீர்க்கும். இத்துடன் பட்டைத்தூளை சேர்த்துக் கொள்ளலாம்.

"ஆப்பீளில் செரிமானத்துக்கு உதவும் நார்ச்சத்தும், வைட்டமின் சி சத்தும் உள்ளது"


No comments:

Post a Comment