மட்டன் கீமா சமோசா செய்வது எப்படி?
சமோசாவில் நிறைய வகை இருக்கு. ஆனியன் சமோசா, உருளைக்கிழங்கு சமோசா, வெஜ் சமோசா ஆகியவை உள்ளன. ஆனால் இப்போ இங்க புதுவிதமான மட்டன் கீமா சமோசா எப்படி செய்யலாம் என்று பார்க்க போறோம். சின்ன சின்னதாக நறுக்கிய மட்டன் துண்டு,வெங்காயம்,பச்சை மிளகாய்,மசாலா எல்லாத்தையும் சேர்த்து செய்யக் கூடிய இந்த சமோசா ஒரு புது விதமான சுவையை கொடுக்கும். இந்த மட்டன் கீமா சமோசா எவ்வாறு செய்யலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.
முக்கிய பொருட்கள்
7 Numbers சமோசா தாள்
250 கிராம் ஆட்டிறைச்சி
பிரதான உணவு
3 Numbers நறுக்கிய வெங்காயம்
2 தேக்கரண்டி நறுக்கிய பச்சை மிளகாய்
1 கப் நறுக்கிய கொத்தமல்லி இலை
1/4 தேக்கரண்டி garam masala powder
1/4 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
தேவையான அளவு கொத்தமல்லி பொடி
1/2 தேக்கரண்டி மஞ்சள்
1 1/2 தேக்கரண்டி இஞ்சி
2 தேக்கரண்டி பூண்டு பேஸ்ட்
1/4 தேக்கரண்டி மிளகாய் பொடி
தேவையான அளவு உப்பு
வெப்பநிலைக்கேற்ப
தேவையான அளவு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்
Step 1:
ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி, 1 ½ டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், சிறிது மிளகாய் தூள், ½ டீஸ்பூன் கொத்தமல்லி தூள், உப்பு ½ டீஸ்பூன், கரம்மசாலா 1/4 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய மிளகாய் 2 டீஸ்பூன் சேர்த்து அனைத்தையும் பொருட்களையும் நன்றாக வதக்க வேண்டும்..
Step 2:
பின்பு 250 கிராம் மட்டன் கீமா சேர்த்து. 4-5 நிமிடம் மீடியம் தீயில் வைத்து வேகவிடவும். அனைத்து பொருட்களையும் நன்றாக வதங்கிய பின் 3-4 நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்க வேண்டும்.
Step 3:
பின்பு நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து தண்ணீர் வற்றும் வரை நன்கு வதக்க வேண்டும்.அடுப்பை அணைத்து விட்டு இந்த மசாலா கலவையை நன்கு ஆற விட வேண்டும்.
Step 4:
அடுத்து சமோசா பட்டியை எடுத்து கோன் வடிவில் சுருட்டி அதில் மசாலா கலவையை நிரப்பி மூடி விட வேண்டும்.
Step 5:
பின்பு எண்ணெயைக் காயவைத்து சமோசா பொன்நிறமாகும் வரை நன்கு வறுத்து எடுக்க வேண்டும்.
Step 6:
இப்போது சுவையான மொறுமொறுப்பான மட்டன் கீமா சமோசா தயார். இதனை உங்களுக்கு விருப்பமான சாஸ் அல்லது கொத்தமல்லி சட்னி சேர்த்து சாப்பிட்டலாம்.
No comments:
Post a Comment