சுவையும் குளிர்ச்சியும் நிறைந்த ஃபலூடா... இனி வீட்டிலேயே எப்படி செய்யலாம்?.
ஐஸ்க்ரிம், கூல்டிரிங்ஸ் போன்று ஃபலூடாவும் கோடைகாலத்தில் விரும்பி சாப்பிடக் கூடிய பானமாகும். பால், ஐஸ்கீரிம், ரோஸ் சிரப், சேமியா, சப்ஜா விதைகள், உலர் திராட்சை, பாதாம், முந்திரி கொண்டு இந்த ஃபலூடாவை தயாரிப்பதால் இதன் சுவை மிக அற்புதமாக இருக்கும். கோடைக்காலத்தில் அதிகம் விற்பார்கள். இதனை வீட்டில் எவ்வாறு தயாரிக்கலாம் என்று பார்க்கலாம்
முக்கிய பொருட்கள்
3 தேக்கரண்டி சியா விதை
பிரதான உணவு
3 தேக்கரண்டி வேகவைத்த/ வேகவைப்பது அரிசி நூடுல்ஸ்
தேவையான அளவு முந்திரி
தேவையான அளவு பால்
தேவையான அளவு ரோஸ் சிரப்
தேவையான அளவு ஐஸ்கிரீம்
Step 1:
ஒரு டம்பளரில் சுவைக்கு (இனிப்புக்கு) தகுந்தவாறு ரோஸ் சிரப் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
Step 2:
அதில் ஊறவைத்த சப்ஜா விதைகள், வேகவைத்த சேமியா, டோன்ட் மில்க் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
Step 3:
அதற்கு மேல் ஐஸ்கீரிம் ஒரு ஸ்கூப், சில சப்ஜா விதைகள், உலர்ந்த திராட்சை, நறுக்கிய முந்திரி மற்றும் பாதாம்களை அடுக்கடுக்காகச் சேர்க்க வேண்டும்.
Step 4:
அவ்வளவு தான் குளுகுளு ஃபலூடா தயார். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிக விரும்பி சாப்பிடக் கூடிய கோடைகாலத்து குளிர்பானம் ஆகும். சிலர் அகர் அகர், கடல்பாசி போன்றவற்றையும் சேர்ப்பார்கள். அது அவரவர் விருப்பத்துக்கும் சுவைக்கும் ஏற்றவாறு சேர்த்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment