எப்பேர்ப்பட்ட சளியாக இருந்தாலும் இந்த ஒரு ரசம் வைத்துக் குடித்தால் போதும். அனைத்து சளிகளையும் கரைத்து உடலிலிருந்து வெளியேற்றிவிடும்
இப்பொழுது மழை காலம் என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடல் சோர்வு மற்றும் எளிதில் சளி பிடிக்க ஆரம்பித்துவிடும். இந்த சளி பிரச்சனையை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டுவிட்டால் காய்ச்சல் வரை கொண்டு சென்று விடும். எனவே வீட்டு வைத்தியம் செய்து சுலபமாக இந்த சளி பிரச்சனையை உடலில் இருந்து முழுவதுமாக நீக்கிவிட முடியும். அதற்கு நமக்கு தேவையான முக்கிய பொருள் என்னவென்றால் தூதுவளை.
இந்த தூதுவளையைப் பயன்படுத்தி சட்னி செய்தோ அல்லது ரசம் வைத்தோ சாப்பிட்டோம் என்றால் உடலில் இருக்கும் அனைத்து சளியையும் வெளிக்கொண்டு வந்துவிடும். அவ்வாறு தூதுவளை வைத்து செய்யக்கூடிய சுவையான ரசத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
தேவையான பொருட்கள்: தூதுவளை – 2 கைப்பிடி, சின்ன வெங்காயம் – 10, தக்காளி – 2, பச்சை மிளகாய் – 3, காய்ந்த மிளகாய் – 2, பூண்டு – 15 பல், மிளகு – ஒரு ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, உப்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 3 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.
No comments:
Post a Comment