பொட்டுக்கடலை சட்னி
பண்டிகை காலங்களில் மாலை வேளையில் நிச்சயம் பலரது வீடுகளில் போண்டா, வடை போன்றவற்றை செய்து சாப்பிடுவோம். அப்படி செய்யும் போது அதற்கு சைடு டிஷ்ஷாக சட்னியை பலர் விரும்புவர். இதுவரை நீங்கள் தேங்காய் சட்னி செய்திருப்பீர்கள். ஆனால் பொட்டுக்கடலை சட்னி வடையுடன் மட்டுமின்றி, இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். இந்த சட்னி தேங்காய் சட்னியை போன்ற செய்முறையைக் கொண்டது.
உங்களுக்கு பொட்டுக்கடலை சட்னி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
கீழே பொட்டுக்கடலை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* துருவிய தேங்காய் - 1 கப்
* பொட்டுக்கடலை - 1/2 கப்
* பச்சை மிளகாய் - 2
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவுதாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் தேங்காய், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சிறிது நீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதை ஒரு பௌலில் எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நீரை ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான பொட்டுக்கடலை சட்னி தயார்.
No comments:
Post a Comment