பர்மீஸ் முட்டை பீஜோ
உங்களுக்கு பர்மீஸ் முட்டை பீஜோ எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பர்மீஸ் முட்டை பீஜோவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வேக வைத்த முட்டை - 5
* வெங்காயம் - 2 (நீள நீளமாக நறுக்கியது)
* பூண்டு - 10 பல்
* வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்* வரமிளகாய் - 5
* புளிச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு நீர்
* கொத்தமல்லி - சிறிது
* எண்ணெய் - 1 கப்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் பூண்டு சேர்த்து மொறுமொறுப்பாகும் வரை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வரமிளகாயை
சேர்த்து சில நிமிடங்கள் வறுத்து இறக்கி, அரைத்து பொடி செய்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் வேர்க்கடலை மற்றும் பொட்டுக்கடலையைப் போட்டு வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* இப்போது வேக வைத்த ஒரு முட்டையை எடுத்து, அதை லேசாக இரண்டு துண்டுகளாக வெட்ட வேண்டும்.
* பின் அதனுள் வறுத்த வெங்காயம், பூண்டு, புளிச்சாறு, எலுமிச்சை சாறு, உப்பு நீர் மற்றும் சிறிது பூண்டு வதக்கிய எண்ணெய் ஊற்ற வேண்டும்.
* அதன் பின் மிளகாய் தூள், வேர்க்கடலை பவுடரை சேர்த்து, சிறிது கொத்தமல்லியையும்
வைத்து பரிமாறினால், முட்டை பீஜோ தயார். இதேப்போல் அனைத்து முட்டைகளையும் செய்ய வேண்டும்.
குறிப்பு:
* முட்டையை முற்றிலும் இரண்டு துண்டுகளாக வெட்டி விடாமல், உள்ளே பொருட்கள் வைக்கும்
No comments:
Post a Comment