pepper-thattai-recipe(தீபாவளி ஸ்பெஷல்: மிளகு தட்டை) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Friday 12 November 2021

pepper-thattai-recipe(தீபாவளி ஸ்பெஷல்: மிளகு தட்டை)

Pepper Thattai Recipe In Tamil

தீபாவளி ஸ்பெஷல்: மிளகு தட்டை

தீபாவளி ஸ்பெஷலாக வீட்டில் பலகாரங்களை செய்வீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு தட்டை பிடிக்குமா? இதுவரை நீங்கள் வீட்டில் தட்டை செய்ததில்லையா? அப்படியானால் இந்த வருட தீபாவளிக்கு மிளகு தட்டை செய்யுங்கள். இந்த தட்டை செய்வது மிகவும் சுலபம். அதோடு இது அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும். உங்களுக்கு மிளகு தட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மிளகு தட்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.


தேவையான பொருட்கள்:

* அரிசி மாவு - 1 கப்


* உளுத்தம் மாவு - 1/4 கப்

* கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் (நீரில் ஊற வைத்துக் கொள்ளவும்)

* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

* மிளகு - 2 டீஸ்பூன் (லேசாக பொடித்துக் கொள்ளவும்)

* கறிவேப்பிலை - சிறிது

* உப்பு - சுவைக்கேற்ப

* பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை

* எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன் + பொரிப்பதற்கு தேவையான அளவு

* தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரிசி மாவை சேர்த்து லேசாக வறுத்து இறக்கி, ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதே வாணலியில் உளுத்தம் மாவு சேர்த்து லேசாக வறுத்து, அதே பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அதில் உப்பு, மிளகு, கடலை பருப்பு, பேக்கிங் சோடா, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் மற்றும் சிறிது நீர் சேர்த்து மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயை எடுத்து, பிசைந்து வைத்துள்ள மாவில் ஊற்றி பிசைந்து கொள்ள வேண்டும்.

* பின்னர் அந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். பின் அதை தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.

* பின் அதை எண்ணெயில் போட்டு குறைவான தீயில் பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால், சுவையான மிளகு தட்டை தயார்.

No comments:

Post a Comment