nonvege-tast-double-beans-greavy(இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்குத் தொட்டுக்கொள்ள இந்த சைடிஷ்ஷை மட்டும் செய்து கொடுங்கள். இதன் சுவை இது சைவமா? அசைவமா? என்ற சந்தேகத்தையே எழுப்பி விடும்) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Saturday 13 November 2021

nonvege-tast-double-beans-greavy(இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்குத் தொட்டுக்கொள்ள இந்த சைடிஷ்ஷை மட்டும் செய்து கொடுங்கள். இதன் சுவை இது சைவமா? அசைவமா? என்ற சந்தேகத்தையே எழுப்பி விடும்)

double

இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்குத் தொட்டுக்கொள்ள இந்த சைடிஷ்ஷை மட்டும் செய்து கொடுங்கள். இதன் சுவை இது சைவமா? அசைவமா? என்ற சந்தேகத்தையே எழுப்பி விடும்


காலை மற்றும் மாலை உணவிற்க்கு தொட்டுக்கொள்ள எப்பொழுதும் போல சாம்பார், சட்னி, குருமா செய்வதை விட இந்த புதுவிதமான கிரேவியை ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள். இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. அத்துடன் இதில் சேர்க்கும் அனைத்து பொருட்களும் சைவமாக இருந்தாலும் இதன் சுவை அசைவம் சாப்பிடுவது போன்ற உணர்வை ஏற்படுத்தும். அவ்வாறு இதனை சமைப்பதற்கு தேவையான ஒரு முக்கிய பொருள் டபுள் பீன்ஸ். இது அனைத்து விதமான சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கிறது. வாருங்கள் இதனை எப்படி சமைக்க வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்: டபுள் பீன்ஸ் – 150 கிராம், பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, எண்ணெய் – 3 ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், சோம்பு – ஒன்றரை ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – ஒன்றரை ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, வேர்க்கடலை – ஒரு ஸ்பூன், பொட்டுக்கடலை – ஒரு ஸ்பூன், தனியா – அரை ஸ்பூன், தேங்காய் – 5 சில்லு, கரம் மசாலா – அரை ஸ்பூன், மிளகாய்தூள் – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி தழை – ஒரு கொத்து.

செய்முறை: முதலில் டபுள் பீன்ஸ் பருப்பை தண்ணீர் ஊற்றி கழுவி 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மறுநாள் தண்ணீரை வடிகட்டி அதனை ஒரு தட்டில் எடுத்து வைக்க வேண்டும். அதன் பின் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். ஒரு ஸ்பூன் வேர்க்கடலையை தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். ஐந்து சில்லு தேங்காயைத் துருவி வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் ஊற வைத்த வேர்க்கடலை ஒரு ஸ்பூன், பொட்டுக்கடலை ஒரு ஸ்பூன், சோம்பு ஒரு ஸ்பூன், துருவிய தேங்காய், அரை ஸ்பூன் தனியா இவற் றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, எண்ணெய் ஊற்ற வேண்டும்.

எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் சோம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் நறுக்கிய வெங்காயம், தக்காளி மற்றும் 3 காய்ந்த மிளகாயை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒன்றரை ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு ஊறவைத்த டபுள் பீன்ஸை இவற்றுடன் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் ஒரு ஸ்பூன் உப்பு, கால் ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் கரம் மசாலா, ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். பிறகு இவற்றுடன் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

பின்னர் கொத்தமல்லி தழைகளைத் தூவி, குக்கரை மூடி, 6 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். அதன் பின் குக்கரில் பிரஷர் குறைந்ததும் மூடியைத் திறந்து ஒரு முறை கலந்து விட்டால் போதும். சுவையான டபுள் பீன்ஸ் கிரேவி தயாராகிவிடும்.

No comments:

Post a Comment