இந்த மசாலாவை அரைத்துப் போட்டு சேனைக்கிழங்கு வறுவலை மட்டும், ஒரு வாட்டி இப்படி செய்து பாருங்க. வேற லெவல் டெஸ்ட். செய்யும்போதே நாக்கில் எச்சி ஊறும்.
ஒரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி விட்டு, அதில் சீரகம் – 1 ஸ்பூன், சோம்பு – 1 ஸ்பூன், வரமல்லி – 1 ஸ்பூன், சிறிய துண்டு பட்டை – 1, கிராம்பு – 2, மிளகு – 1/2 ஸ்பூன், வர மிளகாய் – 3, இந்த பொருட்களை சேர்த்து பொன்னிறமாக கருகாமல் வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து வைத்துக்கொள்ளுங்கள். இதுதான் நம்முடைய சேனைக்கிழங்கு வறுவல் ஸ்பெஷல்
மசாலா அரவை. தண்ணீர் ஊற்றாமல் இதை கொரகொரப்பாக பொடித்து வைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது சேனைக்கிழங்கு வறுவல் செய்யப்போகின்றோம். அடுப்பில் ஒரு கனமான அகலமான கடாயை வைத்து கொள்ளுங்கள். அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1 ஸ்பூன், உளுந்து – 1 ஸ்பூன், கறிவேப்பிலை – 2 கொத்து, இடித்த பூண்டு பல் – 2, கறிவேப்பிலை – 2 கொத்து, சேர்த்து இந்த பொருட்களை எல்லாம் நன்றாக வதக்கி விடுங்கள். இந்த பொருட்கள் சிவந்து வரட்டும்.
அடுத்தபடியாக வேக வைத்திருக்கும் சேனைக்கிழங்கை கடாயில் போட்டு எண்ணெயில் இரண்டு நிமிடம் போல ஃபிரை செய்து விடவேண்டும். அடுத்து மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், அரைத்து வைத்திருக்கும் மசாலா பொடியை கிழங்கின் மேல் தூவி, பிறகு தேவையான அளவு உப்பு தூவி, அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு, இந்த வறுவலை அப்படியே சிவக்கவைத்து மசாலாவின் பச்சை வாடை போகும் வரை, மசாலாக்கள் நன்றாக கிழங்கில் ஒட்டி பிடிக்கும் வரை, ஐந்திலிருந்து ஏழு நிமிடங்கள் வறுத்து எடுத்தால் சூப்பரான சுடச்சுட சேனைக்கிழங்கு வறுவல் தயார்.
இந்த ரெசிபியின் வாசம் பக்கத்து வீட்டு வரைக்கும் வீசும். ட்ரை பண்ணி பாருங்க. சாம்பார் சாதம் ரசம் சாதம் தயிர் சாதம் எதிர்க்கு வேண்டும் என்றாலும் இதை சைட் டிஷ்
ஆக வைத்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment