பன்னீர் புர்ஜி
தேவையான பொருட்கள்:
* பன்னீர் - 200 கிராம் (துருவியது)
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் பன்னீரை துருவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை சேர்த்து மென்மையாக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து, வேண்டுமானால் சிறிது மல்லித் தூளையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் துருவிய பன்னீரை சேர்த்து சிறிது நீரைத் தெளித்து கிளறி, ஒரு நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான பன்னீர் புர்ஜி தயார்.
No comments:
Post a Comment