mixiyil-idli-maavu-araikka-tips(இனி கிரைன்டருக்கு குட்பை சொல்லிவிடலாம். பஞ்சுபோல புசுபுசுன்னு இட்லி சுட, மிக்ஸியில் மாவு அரைக்க நச்சுனு புதுசா 4 டிப்ஸ் உங்களுக்காக.) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Wednesday 13 October 2021

mixiyil-idli-maavu-araikka-tips(இனி கிரைன்டருக்கு குட்பை சொல்லிவிடலாம். பஞ்சுபோல புசுபுசுன்னு இட்லி சுட, மிக்ஸியில் மாவு அரைக்க நச்சுனு புதுசா 4 டிப்ஸ் உங்களுக்காக.)

idli-rava3

இனி கிரைன்டருக்கு குட்பை சொல்லிவிடலாம். பஞ்சுபோல புசுபுசுன்னு இட்லி சுட, மிக்ஸியில் மாவு அரைக்க நச்சுனு புதுசா 4 டிப்ஸ் உங்களுக்காக.



இந்த முறையில் மிக்ஸி ஜாரில் மாவு அரைத்து இட்லி சூட்டால், இந்த இட்லி, ‘மிக்ஸியில் மாவு அரைத்த சுட்ட இட்லியா’ என்று நிச்சயமாக யாராலும் கண்டுபிடிக்கவே முடியாது. அந்த அளவிற்கு பஞ்சு போல ஒரு இட்லிமாவு ரெசிபியை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். கீழே சொல்லப்படும் அளவுகளில் ஒருமுறை மிக்ஸியில் மாவு அரைத்து இட்லி சுட்டு தான் பார்ப்போமே. அதன்பின்பு கிரைண்டருக்கு குட்பை சொல்லிடுவீங்க.

முதலில் இட்லி மாவு அரைக்க எந்தெந்த அளவுகளில் அரிசி உளுந்து எடுக்கவேண்டும் என்று பார்த்துவிடுவோம். இட்லி அரிசி – 4 கப், உளுந்து – 1 1/2 கப், அவல் – 1/2 கப். உங்க வீட்டில எந்த கப்பில் பொருட்களை அளந்து எடுத்துப்பீங்களோ, அதே கப்பில் மேலே சொன்ன பொருட்களை அளந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அவல் வீட்டில் இல்லை என்றால், வடித்த சாதத்தில் இருந்து ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளவேண்டும்.

Tip 1: இதில் சரியான அளவுகள் என்று பார்த்தால் இட்லி அரிசி – 800 கிராம். உளுத்தம் பருப்பு – 280 கிராம் அளவு தேவைப்படும்.

இட்லி அரிசியை நன்றாக கழுவி 4 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்‌. உளுந்தை நன்றாக கழுவி 1 மணி நேரம் ஊற வைத்துக் கொண்டால் போதும். அவல் 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊறினால் போதும்.


உளுந்தை 3 முறை நன்றாகக் கழுவி விட்டு நல்ல தண்ணீரை ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். உளுந்து ஊறவைத்த தண்ணீரை வைத்து தான் உளுந்தை அரைக்க வேண்டும்.


முதலில் மிக்ஸியில் ஊற வைத்திருக்கும் உளுந்தை தண்ணீரை வடித்து போட்டுக்கொள்ள வேண்டும். Tip 2: இந்த உளுந்தை மிக்ஸியில் பல்ஸ் பட்டனில் 10 முறை விட்டு விட்டு ஓட விடுங்கள். அப்போது உளுந்து ஒன்றும் இரண்டுமாக அறிந்திருக்கும். அதன் பின்பு ஒரு கரண்டியை வைத்து மிக்ஸியில் இருக்கும் உளுந்தை ஒருமுறை நன்றாக கலந்துவிட்டு, உளுந்து ஊறவைத்த தண்ணீரை, மிக்ஸி ஜாரில் ஊற்றி மிக்ஸியை ஓட விட்டு உளுந்தை அரைத்து கொள்ள வேண்டும். அரைத்த உளுந்து ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டுக் கொள்ளுங்கள்.

Tip 3: இப்போது உளுந்து நமக்கு ஓரளவுக்கு மங்கலான நிறத்தில் தான் இருக்கும். அதாவது வெள்ளை நிறத்தில் இருக்காது. இந்த உளுந்தை பீட்டரை வைத்து 10 நிமிடம் போல் நன்றாக ஒரே பக்கமாக அடிக்க வேண்டும் . உங்களுடைய வீட்டில் பீட்டர் இல்லை என்றால் உங்கள் கையைக் கொண்டே பத்து நிமிடங்கள் மாவை ஒரே பக்கமாக, அடித்து கலந்துவிட்டால் இந்த மாவு புசுபுசுவென கிரீமியா வெள்ளை நிறத்தில் நமக்கு கிடைக்கும்.

கிரைண்டரில் மாவு ஆட்டினால் பொங்க பொங்க அதுவே மாவை வெள்ளை நிறத்திற்கு மாற்றிவிடும். மிக்ஸியில் அரைத்தால் இந்த ஒரு வேலையை நாம் எக்ஸ்ட்ராவாக செய்துதான் ஆகவேண்டும். புசுபுசுன்னு உளுந்து மாவு இப்போது நமக்கு தயாராக கிடைத்துவிட்டது.

No comments:

Post a Comment