kongu-style-thakkali-kuruma(மணக்க மணக்க அரைச்சுவிட்ட தக்காளி குழம்பு ஒரு வாட்டு இப்படி வச்சு பாருங்க. இட்லி தோசை, சுட சுட சாதத்துக்கு கூட இது செம சைட் டிஷ்.) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Wednesday 13 October 2021

kongu-style-thakkali-kuruma(மணக்க மணக்க அரைச்சுவிட்ட தக்காளி குழம்பு ஒரு வாட்டு இப்படி வச்சு பாருங்க. இட்லி தோசை, சுட சுட சாதத்துக்கு கூட இது செம சைட் டிஷ்.)

thakkali-kuruma

மணக்க மணக்க அரைச்சுவிட்ட தக்காளி குழம்பு ஒரு வாட்டு இப்படி வச்சு பாருங்க. இட்லி தோசை, சுட சுட சாதத்துக்கு கூட இது செம சைட் டிஷ்.


ஸ்பெஷலா ஒரு அவரையே அரைத்து தக்காளி குழம்பு வைக்கப் போகின்றோம். கோயம்புத்தூர் பக்கம் இந்த தக்காளி குழம்பு, ரொம்பவும் பிரபல்யமான ரெசிபி. நம்முடைய ஊர்களில் தக்காளி குழம்பு வைப்பது போல இல்லாமல், கொஞ்சம் வித்தியாசமான மசாலா அரவையை தயார் செய்து, இந்த தக்காளி குழம்பை ஒருவாட்டி செய்துதான் பார்ப்போமே. எப்போதும் சாம்பார் சட்னி என்று போர் அடித்து கொண்டே இருக்கும் போது, வித்தியாசமான சுவையில் நாவிற்கு சுவை தரும் ஒரு ரெசிபி உங்களுக்காக.

முதலில் இந்த குழம்பு வைக்க தேவையான அரவையை தயார் செய்து விடுவோம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் 2 – ஸ்பூன், சின்ன வெங்காயம் – 10 பல், பூண்டு – 6 பல், இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து முதலில் நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். இந்த இரண்டு பொருட்களும் வதங்கி லேசாக நிறம் மாறி வரட்டும். - 

- அதன் பின்பு அதே கடாயில் சோம்பு – 1 ஸ்பூன், பட்டை – 1, கிராம்பு – 2, கசகசா – 1 ஸ்பூன், பொட்டுக்கடலை – 1/2 ஸ்பூன், தேங்காய் துருவல் – 2 கைப்பிடி, இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து தேங்காய் பொன்னிறமாக வரும் வரை வதக்கி இறுதியாக 1 – டேபிள்ஸ்பூன் வர மிளகாய் தூளை கடாயில் போட்டு ஒரு முறை கலந்து விட்டு, அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த கலவையை நன்றாக ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.

அடுத்தபடியாக அதே கடாயில் மீண்டும் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மீடியம் சைஸில் இருக்கும் – 3 தக்காளி பழங்களை கொஞ்சம் பெரிய துண்டுகளாக வெட்டிப் போட்டு, 2 சிட்டிகை உப்பு தூளை தூவி தக்காளி பழங்களை நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். தக்காளியில் பச்சை வாசனை போக வேண்டும். இந்த தக்காளி பழங்கள் நன்றாக ஆறிய பின்பு ஏற்கனவே மசாலா பொருட்களை கொட்டி வைத்திருக்கும் மிக்ஸி ஜாரில், இந்த தக்காளி விழுதையும் சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு விழுது போல இதை அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை வைத்து சட்டுனு 5 நிமிடத்தில் தக்காளி குழம்பை தாளித்து விடலாம்.

ஒரு அகலமான பாத்திரத்தில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு – 1/2 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1 கைப்பிடி, பச்சை மிளகாய் – 1, இந்த பொருட்களை தாளித்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் வதங்கிய உடன் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் விழுதை இந்த பாத்திரத்தில் இருக்கும் தாளிப்பில் ஊற்றி, ஒரு நிமிடம் போல விழுதை எண்ணெயிலேயே வதக்கி விட்டு, அதன் பின்பு குழம்புக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு, கலந்து விட்டு குழம்பை 5 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடுங்கள். அவ்வளவு தான் இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி பரிமாறினால் சூப்பரான தக்காளி குருமா தயார்.

No comments:

Post a Comment