பார்லரில் விற்கும் வெனிலா ஐஸ்கிரீம் வீட்டிலேயே சுலபமாக செய்ய இந்த 4 பொருள் போதுமே! அட இது தெரிஞ்சா இனி அடிக்கடி வீட்டில் ஐஸ்கிரீம் மழை தான்!
ஐஸ்கிரீம் என்றால் அனைவருக்கும் ரொம்பவே பிடித்தமான ஒரு விஷயம் தான். குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை ஐஸ்கிரீம் விரும்பாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதிலும் இந்த வெனிலா ஐஸ்கிரீம் ரொம்பவே பிடித்தமானதாக இருக்கும். வீட்டில் இருக்கும் இந்த 4 பொருட்களை வைத்தே ரொம்ப ரொம்ப சுலபமாக நாமே வெனிலா ஐஸ்கிரீம் சுவையாக தயாரித்து விடலாம்! அதற்கு என்னென்ன பொருட்கள் தேவை? எப்படி தயார் செய்ய வேண்டும்? என்கிற ரகசியத்தை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.
வெனிலா ஐஸ்கிரீம் செய்ய தேவையான அந்த 4 பொருள்: ஃபுல் கிரீம் பால் – 1/2 லிட்டர், கோதுமை மாவு – 2 டீஸ்பூன், சர்க்கரை – 100 கிராம், வெனிலா எசன்ஸ் – 4 துளிகள். -
- வெனிலா ஐஸ்கிரீம் செய்முறை விளக்கம்:
முதலில் ஐஸ்கிரீம் செய்ய தேவையானது பால் தான். அரை லிட்டர் அளவிற்கு ஃபுல் கிரீம் பாலை எடுத்து அடுப்பில் ஒரு பாத்திரத்தில் ஊற்றி சுட வைத்துக் கொள்ளுங்கள். பால் கொதித்து வருவதற்குள் ஒரு சிறிய பௌலில் 2 ஸ்பூன் அளவிற்கு கோதுமை மாவை போட்டு கொள்ளுங்கள். கோதுமை மாவு கரைக்க 4 ஸ்பூன் அளவுக்கு பால் சேர்த்துக் கொள்ளுங்கள. பாலுடன் கோதுமை மாவை நன்கு கட்டிகள் எதுவும் கரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
பால் கொதித்து வந்ததும் அதில் 100 கிராம் அளவிற்கு சர்க்கரையை சேர்த்து சர்க்கரை கரையும் வரை நன்கு கொதிக்க விடுங்கள். பால் கொதித்து சர்க்கரை நன்கு கரைந்ததும் நீங்கள் கரைத்து வைத்துள்ள கோதுமை மாவு கலவையை ஒருமுறை நன்கு கலந்து ஊற்றிக் கொள்ளுங்கள். பால் எந்த அளவிற்கு திக்காக வேண்டுமோ, அது வரை நன்கு கொதிக்க விடுங்கள். குறைந்தது பத்து நிமிடமாவது பால் நன்கு கொதித்து கெட்டியாக மாற தேவைப்படுகிறது.
பால் கொதித்து கொண்டிருக்கும் சமயத்தில் நீங்கள் எந்த ஃப்ளேவரை விரும்புகிறீர்களோ! அந்த ஃப்ளேவர் எசன்ஸ் நீங்கள் கலக்க வேண்டும். வெனிலா எசன்ஸ் 4 சொட்டுகள் விட்டு கொள்ளுங்கள். பத்து நிமிடத்தில் பால் கொதித்து கெட்டியானதும் அதனை நன்கு ஆற விட்டு கொள்ள வேண்டும். பால் நன்கு ஆறியதும் அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரு சுற்று சுற்றி நைசாக
கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment