instent-rice-burfi(கரமுரவென இருக்கும் இந்த சுவையான இன்ஸ்டன்ட் பர்ஃபியை ஒரு முறை செய்து வைத்துக் கொண்டால் போதும். ஒரு மாதம் ஆனாலும் வீணாகாமல் அப்படியே இருக்கும்) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Sunday, 3 October 2021

instent-rice-burfi(கரமுரவென இருக்கும் இந்த சுவையான இன்ஸ்டன்ட் பர்ஃபியை ஒரு முறை செய்து வைத்துக் கொண்டால் போதும். ஒரு மாதம் ஆனாலும் வீணாகாமல் அப்படியே இருக்கும்)

burfi

கரமுரவென இருக்கும் இந்த சுவையான இன்ஸ்டன்ட் பர்ஃபியை ஒரு முறை செய்து வைத்துக் கொண்டால் போதும். ஒரு மாதம் ஆனாலும் வீணாகாமல் அப்படியே இருக்கும்


இனிவரும் பருவ காலங்கள் அனைத்தும் குளிரும், மழையுமாகத்தான் இருக்கும் இதுபோன்ற நேரங்களில் குழந்தைகளுக்கும் சரி, வீட்டிலிருக்கும் பெரியவர்களுக்கும் சரி சற்று கரமுரவென ஏதேனும் வித்தியாசமாக சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். இதுபோன்ற நேரங்களில் நினைத்த உடனே செய்து கொடுக்கும் இந்த சுவையான அரிசி பர்ஃபியை ஒருமுறை செய்து கொடுத்து பாருங்கள். அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். இதனை ஒரு மாதம் வரையிலும் டப்பாவில் போட்டு வைத்து கொண்டு நினைத்த நேரத்திலெல்லாம் சாப்பிட்டு மகிழலாம். வாருங்கள் இந்த சுவையான அரிசி பர்ஃபியை எவ்வாறு சுலபமாக செய்வது என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி – ஒரு கப், நாட்டுசர்க்கரை – அரை கப், பாதாம் – 10, முந்திரி – 10 எண்ணெய் – 200 கிராம், நெய் – அரை ஸ்பூன். - 


- செய்முறை: முதலில் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, 200 கிராம் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் ஒரு கப் புழுங்கல் அரிசியை சேர்க்க வேண்டும். அரிசி நன்றாக பொன்னிறமாகப் பொரியும் வரை லேசாக கிளறி விட்டு, பின்னர் இவற்றை ஒரு வடிகட்டியை பயன்படுத்தி எண்ணெயில் இருந்து அரிசியை மட்டும் வடிகட்டி தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதே கடாயில் அரை ஸ்பூன் நெய் சேர்த்து முந்திரி மற்றும் பாதாம் இவை இரண்டையும் தூளாக பொடித்துக்கொண்டு நெய்யில் வறுத்தெடுக்க வேண்டும். முந்திரி மற்றும் பாதாம் பருப்பை ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்துக் கொண்டு அதே கடாயில் முக்கால் கப் நாட்டுச் சர்க்கரை மற்றும் கால் கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.

சிறிது நேரம் அடுப்பை சிறிய தீயில் வைத்து நாட்டுச்சர்க்கரை நன்றாகக் கரைந்து சற்று கெட்டியான பதத்திற்கு வரும் பொழுது பொரித்து வைத்துள்ள அரிசியை இதனுடன் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். பின்னர் வறுத்து வைத்துள்ள பாதாம் முந்திரியையும் இவற்றுடன் சேர்த்து கலந்து விட வேண்டும்.

அதன் பின் ஒரு தட்டில் லேசாக எண்ணெய் தடவி கொண்டு அதன் மீது கலந்து வைத்துள்ள இந்த கலவையை சேர்த்து நன்றாக பரப்பி விடவேண்டும். ஒரு இருபது நிமிடம் இவை நன்றாக ஆறியதும் கைகளால் சற்று தூள் தூளாக உடைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் சுவையான அரிசி பர்ஃபி தயாராகிவிட்டது.

இதனை ஒரு டப்பாவில் போட்டு எடுத்து வைத்துக்கொண்டால் போதும். நீங்கள் விரும்பும் நேரத்தில் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சாப்பிட்டு மகிழலாம். வீட்டில் இருக்கும் இந்த 2 பொருளை வைத்தே மிகவும் சுலபமாக செய்யக்கூடிய இந்த சுவையான இன்ஸ்டன்ட் பர்ஃபியை நீங்களும் ஒருமுறை செய்து கொடுத்துப் பாருங்கள். அதன் பிறகு அடிக்கடி ஸ்நாக்ஸ் வாங்க வேண்டிய அவசியமே உங்களுக்கு வராது.


No comments:

Post a Comment