idly-maavu-kutty-bonda-seimurai(காலையில் இட்லி மாவு இட்லி, தோசைக்கு மட்டுமல்ல இப்படி குட்டி குட்டி போண்டாவும் செய்து சாப்பிட்டு பாருங்கள்! ருசி பிரமாதமாக இருக்கும்.) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Thursday, 14 October 2021

idly-maavu-kutty-bonda-seimurai(காலையில் இட்லி மாவு இட்லி, தோசைக்கு மட்டுமல்ல இப்படி குட்டி குட்டி போண்டாவும் செய்து சாப்பிட்டு பாருங்கள்! ருசி பிரமாதமாக இருக்கும்.)

mini-mysore-bonda3

காலையில் இட்லி மாவு இட்லி, தோசைக்கு மட்டுமல்ல இப்படி குட்டி குட்டி போண்டாவும் செய்து சாப்பிட்டு பாருங்கள்! ருசி பிரமாதமாக இருக்கும்.


எல்லோருடைய வீட்டிலும் காலையில் கண்டிப்பாக இட்லி மாவு இருக்கும். இட்லி மாவு இட்லி, தோசைக்கு மட்டுமல்ல, இப்படி குட்டி குட்டி போண்டாக்களாக சுட்டு சாப்பிட்டால் எப்படி இருக்கும்? காலையில் டீயுடன் அல்லது சிற்றுண்டி உடனே இந்த குட்டி குட்டி போண்டாக்களை செய்து சாப்பிட்டால் ரொம்பவே ருசியாக இருக்கும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இந்த குட்டி போண்டாக்களை ரொம்பவே சுலபமாக ரொம்ப ரொம்ப ருசியான சுவையில் எப்படி செய்வது? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

குட்டிக்குட்டி போண்டா செய்ய தேவையான பொருட்கள்: இட்லி மாவு – 2 கப், பூண்டு பல் – 2, வர மிளகாய் – 5, அரிசி மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், ரவை – ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து.

குட்டிக்குட்டி போண்டா செய்முறை விளக்கம்: முதலில் இட்லி மாவு 2 கப் அளவிற்கு எடுத்து கொள்ளுங்கள். இட்லி மாவு குறைந்தது ஒரு நாள் வரை நன்கு புளிக்க விட்டிருக்க வேண்டும். புதிதாக அரைத்த இட்லி மாவில் இந்த போண்டாக்களை செய்தால் அவ்வளவு ருசியாக இருக்காது. நாம் சாதாரணமாக இட்லி, தோசை சுடுவதற்கு எடுக்கும் மாவே சரியாக இருக்கும். 5 வர மிளகாய்களை எடுத்து கொஞ்சம் சுடு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் ஊற விட்டு விடுங்கள்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள் அதில் 2 பல் தோல் உரித்த பூண்டை போட்டு அதனுடன் ஊற வைத்த வர மிளகாய்களை சேர்த்து நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த விழுதை இட்லி மாவுடன் சேர்த்து நன்கு கலந்து விட்டு கொள்ளுங்கள். பின்னர் மாவு போண்டா சுடுவதற்கு ஏதுவாக நன்கு கெட்டியாக இருக்க வேண்டும். எனவே அதனுடன் அரிசி மாவு ஒரு டேபிள் ஸ்பூன் கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

எந்த அரிசி மாவாக இருந்தாலும் பரவாயில்லை. பின்னர் வறுத்த ரவை ஒரு டேபிள்ஸ்பூன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். வறுக்காத ரவையாக இருந்தாலும் பரவாயில்லை. பின்னர் ஒரு கொத்து கறிவேப்பிலையை நன்கு கழுவி பொடிப் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். அதனை அப்படியே 5 நிமிடம் ஊற விட்டு விடுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள்.

எண்ணெய் நன்கு காய்ந்ததும், மாவினை கையில் எடுத்து கிள்ளி குட்டி குட்டி உருண்டைகளாக எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டியது தான். அவ்வளவுதான் ரொம்ப ரொம்ப சுலபமாக ஐந்தே நிமிடத்தில் காலையில் இட்லி, தோசையுடன் இந்த போண்டாவையும் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். காலையில் டீயுடன் இந்த போண்டா வைத்து சாப்பிடும் பொழுது இன்னும் அட்டகாசமாக இருக்கும். நீங்களும் இதே முறையில் உங்கள் வீட்டில் செய்து வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடுங்கள்.

No comments:

Post a Comment