easy-bracoli-poriyal((வித்தியாசமான இந்த ப்ராக்கலி பொரியலை இவ்வாறு ஒருமுறை வீட்டில் சமைத்து சாப்பிட்டு பாருங்கள். இதன் சுவையும் மற்ற காய்கறியின் சுவையைப் போன்றே அசத்தலாக இருக்கும்) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Thursday, 14 October 2021

easy-bracoli-poriyal((வித்தியாசமான இந்த ப்ராக்கலி பொரியலை இவ்வாறு ஒருமுறை வீட்டில் சமைத்து சாப்பிட்டு பாருங்கள். இதன் சுவையும் மற்ற காய்கறியின் சுவையைப் போன்றே அசத்தலாக இருக்கும்)

bracoli

வித்தியாசமான இந்த ப்ராக்கலி பொரியலை இவ்வாறு ஒருமுறை வீட்டில் சமைத்து சாப்பிட்டு பாருங்கள். இதன் சுவையும் மற்ற காய்கறியின் சுவையைப் போன்றே அசத்தலாக இருக்கும்



எப்பொழுதும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏதேனும் ஒரு காய்கறியை பொரியலாக செய்து வைத்திருப்போம். அவ்வாறு நான் அடிக்கடி செய்வது கேரட், பீன்ஸ், கத்தரிக்காய், காலிஃப்ளவர், கோஸ், உருளைக்கிழங்கு, முருங்கைக்காய் இது போன்ற காய்கறிகளை தான். ஆனால் பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாக தெரியும் இந்த பிராக்கலியை யாரும் சமைப்பதில்லை. இதன் அத்தியாவசிய பயன் தெரிந்த ஒரு சிலர் மட்டுமே இதனை வீட்டில் சமைத்து சாப்பிடுகிறார்கள். இந்த ப்ராக்கலியில் உடலுக்கு தேவையான புரோட்டீன் சத்து அதிகமாக இருக்கிறது. மீன், முட்டை, மாமிசம் இவற்றில் இருப்பதை விட இந்த பிராக்கலியில் அதிக அளவு புரதச்சத்து இருக்கிறது. இந்த பிராக்கலியை வீட்டில் எப்படி சுவையாக சமைத்து சாப்பிட வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்: ப்ராக்கலி – 300 கிராம், தேங்காய் துருவல் – அரை கப், பெரிய வெங்காயம் – ஒன்று, காய்ந்த மிளகாய் – ஐந்து, இஞ்சி பூண்டு விழுது – அரை ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், சிக்கன் மசாலா – அரை ஸ்பூன், கார மிளகாய் தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கொத்து, எண்ணெய் – 4 ஸ்பூன்.

செய்முறை: முதலில் ப்ராக்கலியை சுத்தமாக கழுவிக் கொண்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு பெரிய வெங்காயத்தையும் நீளவாக்கில் அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் காய்ந்த மிளகாயை சிறு துண்டுகளாக உடைத்து வைக்க வேண்டும்.

பிறகு ஒரு கடாயை அடுப்பின் மீது வைத்து நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எனண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். அதன் பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்பு இதனுடன் காய்ந்த மிளகாய் மற்றும் நறுக்கி வைத்த ப்ராக்கலியை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

அதன்பிறகு இவற்றுடன் துருவிய தேங்காய் அரை கப், அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் மிளகாய்த் தூள் மற்றும் அரை ஸ்பூன் கறிமசாலா இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 நிமிடத்திற்கு ஒருமுறை கலந்து விட்டுக் கொண்டே இருக்கவேண்டும். இவற்றுடன் கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து கலந்து விட வேண்டும்.

பின்னர் தட்டை போட்டு மூடி சிறிது நேரம் அப்படியே வேக வைக்க வேண்டும். அதன்பின் தட்டை திறந்து நறுக்கிய கொத்தமல்லி தழைகளை சேர்த்து நன்றாக கலந்து விட்டு அடுப்பை அனைத்துவிட வேண்டும். அவ்வளவுதான் சுவையான ப்ராக்கலி பொரியல் தயாராகிவிட்டது. இதனை சுட சுட சாதத்துடன் பிரெட்டியும் சாப்பிடலாம். அல்லது சாப்பாட்டுக்கு சைட் டிஷ்ஷாகவும் வைத்து சாப்பிடலாம். ஆரோக்கியம் நிறைந்த இந்த பிராக்கலி பொரியலை நீங்களும் ஒருமுறை உங்கள் வீட்டில் ட்ரை செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும்.

No comments:

Post a Comment