பொரிகடலை உருண்டை செய்யறது இவ்வளவு ஈஸியா?
INGREDIENTS
அரிசி மாவு - 1/2 கப்
பொரிகடலை - 1/2 கப்
உலர்ந்த தேங்காய் துருவல் - 1/2 கப்
நிலக்கடலை - 1/2 கப்
வெல்லம் - 3/4 கப்
உலர்ந்த பழங்கள் (முந்திரி +உலர்ந்த திராட்சை பழங்கள்) - 8-10 (உடைத்தது)
நெய் - 1/2 கப்
தண்ணீர் - 1/4 கப்
ஏலக்காய் - 4
Red Rice Kanda Poha
Save PRINT
HOW TO PREPARE
1.ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் ஊற்ற வேண்டும்
2. அதில் முந்திரி பருப்பு மற்றும் உலர்ந்த திராட்சை பழங்கள் சேர்த்து
பொன்னிறமாக வறுக்க வேண்டும். அதை தனியாக எடுத்து வைக்கவும்
3. இப்பொழுது
அதே கடாயில் பொரி கடலை, நிலக்கடலை மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்.
4.1-2 நிமிடங்கள் வரை வறுத்து ஒரு மிக்ஸி சாரில் தட்ட வேண்டும்.
5. இப்பொழுது எல்லாவற்றையும் கரகரப்பாக அரைத்து கொள்ளவும்
6. அடுப்பில் மற்றொரு கடாயை வைத்து அதில் வெல்லம், தண்ணீர் சேர்த்து சூடுபடுத்த வேண்டும்.
7. வெல்லம் முழுவதுமாக கரைந்து கொஞ்சம் கெட்டியான பதம் வரும் வரை சூடுபடுத்தவும்.
8. இப்பொழுது அரைத்த கடலை கலவை, நெய் ,அரிசி மாவு போன்றவற்றை வெல்லத்துடன் சேர்த்து கிளற வேண்டும்.
9. வறுத்த உலர்ந்த பழங்களையும் சேர்த்து நன்றாக கிளறவும்.
10.இதை தட்டில் தட்டி சில நிமிடங்கள் ஆற விடவும்
11. பிறகு பந்து
அல்லது உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் உருட்டி ஒரு தட்டில்
வைத்து பரிமாறவும்.
INSTRUCTIONS
1.அதிகமாக அரிசி மாவு பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் லட்டு உலர்ந்து போய் சீக்கிரம் உடைந்துவிடும். பிடிக்கவும் வசதியாக இருக்காது
2.நிலக்கடலையை அதிக நேரம் வறுக்க வேண்டாம். ஏனெனில் கருகி போகி அதன் சுவை மாறிவிடும்.
NUTRITIONAL INFORMATION
பரிமாறும் அளவு - 1 லட்டு
கலோரிகள் - 102
கொழுப்பு - 5.8 கிராம்
புரோட்டீன் - 1.9 கிராம்
கார்போஹைட்ரேட் - 10.6 கிராம்
நார்ச்சத்து - 0.5 கிராம்
No comments:
Post a Comment