ஸ்வீட் கார்ன் கொசம்பரி ரெசிபி /மக்காச்சோள மாதுளை கொசம்பரி சாலட் செய்வது எப்படி/யுகாதி ஸ்பெஷல் ரெசிபி
INGREDIENTS
மக்காச்சோளம் - 1 பெளல்
எண்ணெய் - தாளிப்பதற்கு
கடுகு - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி இலை(நறுக்கியது) - ஒரு கைப்பிடியளவு
பச்சை மிளகாய்(நறுக்கியது) - 1
மாதுளை - 1/4 கப்
லெமன் ஜூஸ் - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய்-1/2 கப்
உப்பு - சுவைக்கேற்ப
மிளகு (நுனிக்கியது) - 1 டீ ஸ்பூன்
HOW TO PREPARE
ஒரு கடாயை எடுத்து கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் எண்ணெய்யை ஊற்றி கொள்ளுங்கள்
கடுகு, பச்சை மிளகாய் போட்டு தாளித்து மக்காச்சோளம், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக
சேர்த்து நன்றாக வதக்கவும்.
நுனிக்கிய மிளகுத்தூள், லெமன் ஜூஸை மேலே தூவி விட வேண்டும்
எல்லாவற்றையும் நன்றாக கலந்து ஒரு பெளலிற்கு மாற்றி கொள்ளுங்கள்
இன்னும் கொஞ்சம் லெமன் ஜூஸ் சேர்த்து கொத்தமல்லி இலைகளை அதன் மேல் தூவி இறக்குங்கள்
சுவையான ஸ்வீட் கார்ன் கொசம்பரி ரெசிபி ரெடி
INSTRUCTIONS
நீங்கள் ப்ரஷ்ஷான மக்காச்சோளத்தை பயன்படுத்த விரும்பினால் சமைக்காமல் அப்படியே சாலட் உடன் கலந்து கொள்ளுங்கள்.
இந்த சாலட்டை
குழந்தைகளுக்கு கொடுக்கும் போது பச்சை மிளகாய் சேர்க்காமல் லெமன் ஜூஸ் மட்டும் சேர்த்து கொடுங்கள்.
NUTRITIONAL INFORMATION
பரிமாறும் அளவு - 1 கப்
கலோரிகள் - 170 கலோரிகள்
No comments:
Post a Comment