தினை மாவு பூரி சாப்பிட்டிருக்கீங்களா?... ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க... அப்புறம் விடவே மாட்டீங்க...
INGREDIENTS
ராஜ்கிரா மாவு (தினை) - 1 கப்
உருளைக்கிழங்கு - 1
கொத்தமல்லி இலைகள்-நறுக்கியது (1 கைப்பிடியளவு)
இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு
ராக் உப்பு - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
HOW TO PREPARE
உருளைக்கிழங்கை வேக வைத்து அதன் தோலை உரித்து கொள்ளவும்
பிறகு அதை நன்றாக பிசைந்து கொள்ளவும்
இதனுடன்
இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி இலைகள், ராக் சால்ட், நெய் இவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
அதனுடன் ராஜ்கிரா மாவையும் சேர்த்து அப்படியே மாவை பூரி பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்
5-10 நிமிடங்கள் அப்படியே வைத்து இருந்து பிறகு சின்ன சின்ன உருண்டைகளாக மாவை உருட்டி கொள்ளவும்
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி 4-5 நிமிடங்கள் வரை சூடுபடுத்தவும்
ஒவ்வொரு உருண்டையையும் பூரி மாதிரி தேய்த்து ஒவ்வொன்றாக பொரித்து எடுக்கவும்
பூரியின் விளம்புகள் நன்றாக மொறு மொறுவென வரும் வரை காத்திருந்து பொரிக்கவும்
அப்படியே அதை ஒரு தட்டிற்கு மாற்றி உங்களுக்கு பிடித்தமான சைடிஸ் உடன் பரிமாறவும்.
INSTRUCTIONS
வேக வைத்த
உருளைக்கிழங்கில் உள்ள தண்ணீர் பதத்தை கொண்டே மாவை பிசைய முயற்சி செய்யுங்கள். அதிக தண்ணீர் சேர்க்க தேவையில்லை.
விரதம் இருந்தால் ராக் சால்ட் சேர்த்து கொள்ளுங்கள். இல்லையென்றால் சாதாரண உப்பே போதும்
No comments:
Post a Comment