சுவையான... சர்க்கரைவள்ளிக் கிழங்கு வறுவல்
தேவையான பொருட்கள்:
* சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 5
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* சாம்பார் பொடி - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1/2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் சர்க்கரைவள்ளிக் கிழங்கை நீரில் நன்கு கழுவி, குக்கரில் போட்டு, போதுமான அளவு நீரை ஊற்றி அடுப்பில் வைத்து,
குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கிழங்கின் தோலை உரித்துவிட்டு, வட்டத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
* பின்பு ஒரு கடாய்/பேனை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.
* பின் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, வெங்காயம் நன்கு வதங்கும் வரை வதக்கவும்.
* பிறகு, வெட்டி வைத்துள்ள கிழங்கைப் போட்டு, உப்பு, மிளகாய் தூற் மற்றும் சாம்பார் பொடி சேர்த்து, சிறிது நீர் தெளித்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* கிழங்கு கடாயில் ஒட்டுவது போன்று இருந்தால், சிறிது எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் குலைந்துவிடும் வகையில் கிளறி விடாதீர்கள். கிழங்கு ஓரளவு நன்கு வதங்கிய பின், அடுப்பை அணைத்து இறக்கினால், சுவையான சர்க்கரைவள்ளிக் கிழங்கு வறுவல் தயார்.
குறிப்பு:
* இந்த வறுவல் செய்வதற்கு நான்ஸ்டிக் பயன்படுத்தினால், பாத்திரத்தில் அதிகம் ஒட்டுவதும் குறையும் மற்றும் எண்ணெயும் அதிகம் பயன்படுத்த வேண்டியதில்லை.
* இஞ்சி மற்றும் பூண்டு வாய்வுத் தொல்லை பிரச்சனையைத் தடுக்க உதவும்.
* வேண்டுமானால், தாளிக்கும் போது சோம்பு, பட்டை, கிராம்பு மற்றும் சாம்பார்
பொடிக்கு பதிலாக கரங்ம மசாலா சேர்த்துக் கொள்ளலாம்.
* கிழங்கு இனிப்பு என்பதால், மிளகாய் தூளை உங்களுக்குத் தேவையான அளவு சேர்த்துக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment