ரெஸ்டாரண்ட் ஸ்டைல் ஹரா பரா கபாப்
தேவையான பொருட்கள்:
* பசலைக்கீரை - 2 கப்
* கொத்தமல்லி - 1/4 கப்
* உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து மசித்தது)
* பச்சை பட்டாணி - 1 கப் (வேக வைத்தது)
* இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 2 பல் (பொடியாக நறுக்கியது)
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
* மாங்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
* சாட் மசாலா - 1 டீஸ்பூன்
* கடலை மாவு - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
* கோதுமை பிரட் தூள் - 1/2 கப்
செய்முறை:
* முதலில் பிளெண்டரில் பசலைக்கீரை, கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, வேக வைத்த பட்டாணி
ஆகியவற்றை ஒன்றாக போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தில் உருளைக்கிழங்கு, அரைத்த கலவை, உப்பு, மாங்காய் தூள், கடலை மாவு, சாட் மசாலா ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் பிரட் தூள் சேர்த்து நன்கு இறுக்கமாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்பு பிசைந்து வைத்துள்ள கலவையை சரிசம அளவில் உருண்டைகளாக உருட்டி தட்டையாக தட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து,
அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ளதை போட்டு பொன்னிறமாக முன்னும் பின்னும் பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்தையும் பொரித்து எடுத்தால், சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் ஹரா பரா கபாப் தயார்.
No comments:
Post a Comment