red-velvet-pancake(புத்தாண்டு ஸ்பெஷலாக ரெட் வெல்வெட் பேன் கேக் செய்வது எப்படி? நிமிடத்தில் செய்திடலாம்!!) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Sunday 26 September 2021

red-velvet-pancake(புத்தாண்டு ஸ்பெஷலாக ரெட் வெல்வெட் பேன் கேக் செய்வது எப்படி? நிமிடத்தில் செய்திடலாம்!!)

Red Velvet Pancake

புத்தாண்டு ஸ்பெஷலாக ரெட் வெல்வெட் பேன் கேக் செய்வது எப்படி? நிமிடத்தில் செய்திடலாம்!!

INGREDIENTS
மைதா மாவு - 10 கப்

சர்க்கரை - 1/4 கப்

கோக்கோ பவுடர் - 2/3 கப்

பேக்கிங் சோடா - 6 டேபிள் ஸ்பூன்

பேக்கிங் பவுடர் - 4 டேபிள் ஸ்பூன்

உப்பு - 5 டேபிள் ஸ்பூன்

பட்டர் மில்க் - 2 கப்

முட்டை - 2

சிவப்பு கலரிங் பொடி-2 டேபிள் ஸ்பூன்

பட்டர் மற்றும் மாப்பிள் சிரப் - 1 டேபிள் ஸ்பூன்

Red Rice Kanda Poha
Save PRINT
HOW TO PREPARE
ஒரு பெரிய பெளலில் மைதா மாவு மற்றும் சர்க்கரையை சேர்க்க வேண்டும்

நன்றாக இரண்டையும் கலந்து கொள்ள வேண்டும்

அதனுடன் கோக்கோ பவுடர் மற்றும் பேக்கிங் சோடா சேர்க்கவும்

நன்றாக கலக்கவும்

உப்பு தேவைக்கேற்ப சேர்க்கவும்

எல்லா பொருட்களையும் நன்றாக கிளறவும்

ஒரு 5 சிப் லாக் கவர் அல்லது 5 காற்று புகாத டப்பாக்களை எடுத்து கொள்ளவும்

ஒவ்வொரு கவரிலும் அல்லது டப்பாக்களில் இரண்டு கப் அளவிற்கு மாவு கலவையை வைக்கவும்

இப்பொழுது இவைகளை பிரிட்ஜில் வைத்து விடவும்.

பேன் கேக் செய்முறை

ஒரு பெரிய பெளலை எடுத்து கொள்ளவும்

கலந்த கலவையை அதில் சேர்க்கவும்

பிறகு ஒரு சிறிய பெளலை எடுத்து கொள்ளவும்

அதில் பட்டர் மில்க் மற்றும் முட்டையை சேர்க்கவும்.

இரண்டையும் ஒரு கலக்கியை கொண்டு நன்றாக அடித்து கொள்ளவும்

அதனுடன் கலரிங் பொடியை சேர்க்கவும்

இப்பொழுது எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும்

பிரிட்ஜில் வைத்து எடுக்கப்பட்ட கலவையை இதனுடன் சேர்க்கவும்

பிறகு நன்றாக ஈரப்பதம் வரும் வரை நன்றாக கலக்கவும்

பிறகு ஒரு தவாவை எடுத்து சூடுபடுத்தவும்

அதில் எண்ணெய் அல்லது பட்டரை தடவ வேண்டும்

இப்பொழுது கலந்து வைத்துள்ள பேட்டரை 1/4 கப் அளவிற்கு அதில் ஊற்றவும்

மேலே நுரைகள் வந்ததும் அதை திருப்பி போடவும்

மறு பக்கம் பொன்னிறமாக வரும் வரை சூடுபடுத்தவும்

நன்றாக வெந்ததும் பேன் கேக்கை ஒரு தட்டில் வைக்கவும்

இப்பொழுது கேக்கை வெண்ணெய் மற்றும் சிரப் மேலே ஊற்றி அலங்கரித்து பரிமாறவும்.

சூடாக பரிமாறவும்

INSTRUCTIONS
ரெட் வெல்வெட் கேக்கை எப்போது வேண்டுமானாலும் தயாரித்து வைத்து பரிமாறலாம்.
NUTRITIONAL INFORMATION
பரிமாறும் அளவு - 170 கிராம்
கலோரிகள் - 597 கலோரிகள்
கொழுப்பு - 25 கிராம்
புரோட்டீன் - 13 கிராம்

No comments:

Post a Comment