Pudding cake (புட்டு கேக் )
தேவையானவை: பெரு அரிசி (புட்டரிசி) கால் கப்
துருவிய தேங்காய்
- 2 கப், சர்க்கரை - அரை கப், நெய் - 1 டீஸ்பூன்,
செய்முறை: அரிசியைக் கழுவி அரை மணிநேரம் ஊறவைத்து, பின் நீரை வடித்துவிட்டு மிக்ஸியில் போட்டு மாவாக்கி, சல்லடையில் சலித்து எடுக்கவும். வாணலியை சூடு செய்து மாவை நன்கு குடு வர வறுத்துக் கொட்டி ஆறவைக்கவும். பின்னர் இந்த மாவில் சிறிது நீர் தெளித்து பிசறி, பெரிய கண் சல்லடையில் சலித்து இட்லிப்பாத்திரத்தில் ஆவியில் வைத்து வேசுவைக்கவும் வெந்ததும் தட்டில் கொட்டி, ஆறியதும் சர்க்கரை, நெய் சேர்த்து கிளறவும்.
ஒரு சிறிய கிண்ணத்தில், துருவிய தேங்காயை முதலில் சிறிது பரப்பி, அதன் மேல் புட்டை அழுத்தி நிரப்பி தலைகீழாக ஒரு தட்டில் கவிழ்த்தால், தேங்காய் கிரீடத்தோடு புட்டு கேக் ரெடி கலர் தேங்காய் துருவல் என்றால், குழந்தைகளின் கண்ணைக் கவரும் வகையில் கலர் கலராக புட்டு கேக் செய்யலாம்.
No comments:
Post a Comment