மக்கானா கிரேவி
தேவையான பொருட்கள்:
* மக்கானா/தாமரை விதைகள் - 2 கப்
* இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
* பிரஷ் க்ரீம் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* நெய் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 3/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* முந்திரி - 5
* வரமிளகாய் - 2
* மிளகு - 1 /4 டீஸ்பூன்
* சோம்பு - 1 /2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் தக்காளியைப் போட்டு நன்கு பச்சை வாசனை போக மென்மையாக வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் முந்திரி, வரமிளகாய், சோம்பு மற்றும் மிளகு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பேனில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், மக்கானாவைப்
போட்டு மொறுமொறுவென்று மாறும் வரை வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளிக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கி, அரைத்து வைத்துள்ள வெங்காய தக்காளி விழுதை சேர்த்து கிளறி 5 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.
* பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா மற்றும் சுவைக்கேற்ப உப்புசேர்த்து கிளறி, சில நிமிடங்கள் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அதில் 3/4 கப் நீரை ஊற்றி, எண்ணெய் தனியாக பிரியும் வரை குறைந்தது 7-10 நிமிடம் குறைவான
தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் வறுத்த மக்கானாவை சேர்த்து 2 நிமிடம் வேக வைத்து, பின் பிரஷ் க்ரீம் சேர்த்து கிளறி இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான மக்கானா கிரேவி தயார்.
No comments:
Post a Comment