பன்னீர் பாப்கார்ன்
தேவையான பொருட்கள்:
* பன்னீர் - 200 கிராம்
* உலர்ந்த கற்பூரவள்ளி இலை - 1 டீஸ்பூன்
* சில்லி ப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மைதா - 1/4 கப்
பிரட் தூள் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் பன்னீரை சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பௌலில் பன்னீர் துண்டுகள், உப்பு, சில்லி ப்ளேக்ஸ், உலர்ந்த கற்பூரவள்ளி இலைகளைப் போட்டு
நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பௌலில் மைதா, உப்பு மற்றும் நீர் சேர்த்து ஓரளவு நீர் போன்று கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அந்த மைதாவில் பன்னீரை பிரட்டி, பின் அதை பிரட் தூளில் பிரட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரட் தூளில் பிரட்டிய பன்னீர் துண்டுகளைப் போட்டு
பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மொறுமொறுப்பான பன்னீர் பாப்கார்ன் தயார்.
No comments:
Post a Comment