தக்காளி-தேங்காய் பால் புலாவ் செய்வது எப்படி?
புலாவ்வில் எத்தனையோ வகைகள் இருந்தாலும், எளிதாகவும் சுவையாகவும் சமைக்கக்கூடிய புலாவ் வகைகளில் தக்காளி&தேங்காய்பால் புலாவும் ஒன்று
தேவையான பொருட்கள் :
பாஸ்மதி அரிசி ஒரு கப்,
வெங்காயம் 1,
தக்காளி 3,
இஞ்சி பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி,
பச்சைமிளகாய் 2,
புதினா ஒரு கைப்பிடி,
கொத்தமல்லித்தழை ஒரு கைப்பிடி,
[பாட்டி மசாலா] மிளகாய்தூள் அரை தேக்கரண்டி,
தேங்காய்பால் அரை கப்,
உப்பு தேவையான அளவு.
தாளிக்க:
நெய் ஒரு மேசைக்கரண்டி,
எண்ணெய் 2 தேக்கரண்டி,
பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா 2.
செய்முறை :
1. வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.தக்காளியைப் பொடியாக நறுக்கிக்
கொள்ளுங்கள்.பச்சைமிளகாயைக் கீறிக் கொள்ளுங்கள்.அரிசியை நன்றாக கழுவி தேங்காய் பாலுடன், ஒன்றேகால் கப் தண்ணீர் சேர்த்து ஊறவையுங்கள்.
2. எண்ணெய், நெய் காயவைத்து பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்த பின்னர் வெங்காயம், பச்சைமிளகாய், சிட்டிகை உப்பு சேர்த்து, நன்கு வதக்கவும்.
3. வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
4. தக்காளி நன்றாக வதங்கியதும் [பாட்டி மசாலா] மிளகாய்தூள், புதினா, கொத்துமல்லி சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள்.
5. பிறகு, ஊற
வைத்த அரிசியை தண்ணீர், தேங்காய் பால் கலவையோடு சேர்த்து ஊற்றுங்கள்.
6. மேலும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து, குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்குங்கள்.
7. விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து சிறிது நெய் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.
அருமையான தக்காளி & தேங்காய் பால் புலாவ் ரெடி.
No comments:
Post a Comment