crunchy-paneer-nuggets-recipe(மொறுமொறுப்பான... பன்னீர் நக்கட்ஸ்) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Sunday, 26 September 2021

crunchy-paneer-nuggets-recipe(மொறுமொறுப்பான... பன்னீர் நக்கட்ஸ்)

Crunchy Paneer Nuggets Recipe In Tamil

crunchy-paneer-nuggets-recipe(மொறுமொறுப்பான... பன்னீர் நக்கட்ஸ்)


தேவையான பொருட்கள்:

* பன்னீர் - 200 கிராம் (துண்டுகளாக்கிக் கொள்ளவும்)

* மைதா - 1/4 கப்

* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

* சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்

* பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்

* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்

* பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்

* பால் - தேவையான அளவு

* பிரட் தூள் - 1/4 கப்

* கார்ன் ப்ளேக்ஸ் - 1/2 கப்

* உப்பு - தேவையான அளவு

* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பௌலில் பன்னீர் துண்டுகளை எடுத்து, அதில் சுடுநீரை ஊற்றி பன்னீரை சிறிது நேரம் ஊற வையுங்கள்.

* பின் நீரை முழுமையாக வடிகட்டி வெளியேற்றிவிட்டு, பன்னீர் துண்டுகளில் மிளகாள் தூள், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி விடுங்கள்.


* பின்பு கார்ன் ப்ளேக்ஸை பொடி செய்து, அதை பிரட் தூளுடன் சேர்த்து கலந்து விடுங்கள்.

* பிறகு பிரட்டி வைத்துள்ள பன்னீரை பிரட் தூளில் பிரட்டி எடுத்து, ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

* அடுத்து ஒரு பௌலில் மைதா மாவு, சோள மாவு, பேக்கிங் பவுடர், மிளகுத் தூள், பூண்டு மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தேவையான அளவு பால் ஊற்றி பன்னீரை கோட்டிங் செய்யும் பதத்தில் கலந்து கொள்ளுங்கள்.

* பின் அதில் ஒவ்வொரு பன்னீர் துண்டுகளையும் போட்டு பிரட்டி தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

* அதன் பின், பன்னீர் துண்டுகளை மீண்டும் பிரட் தூளில் பிரட்டி தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

* இறுதியாக, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பன்னீர் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மொறுமொறுப்பான பன்னீர் நக்கட்ஸ் ரெடி!

No comments:

Post a Comment