சத்தான... வாழைத்தண்டு சூப்
தேவையான பொருட்கள்:
* வாழைத்தண்டு - 1 கப் (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* சீரகப் பொடி - 1/4 டீபூன்
* மிளகுத் தூள் - சுவைக்கேற்ப
* எலுமிச்சை சாறு - சுவைக்கேற்ப
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு..
* எண்ணெய் - 1 டீபூன்
* கடுகு - 1/2 டீபூன்
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் வாழைத்தண்டில் உள்ள நார் பகுதியை நீக்கிவிட்டு, பின் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* நறுக்கிய வாழைத்தண்டை மோரில் போட்டு சிறிது நேரம் ஊற வைக்கவும்.
* பின்பு ஒரு குக்கரில் நறுக்கிய வாழைத்தண்டு, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் 2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* வாழைத்தண்டு மென்மையாக வெந்ததும், அதில் உள்ள நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.
* பிறகு வேக வைத்துள்ள வாழைத்தண்டை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீர் அல்லது வாழைத்தண்டு
வேக வைத்த நீரை ஊற்றி அரைத்து வடிகட்டிக் கொண்டு, பின் அதை எஞ்சிய வாழைத்தண்டு வேக வைத்துள்ள நீருடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.
* பின் அந்த கலவையை அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க வைக்கவும். அதே சமயம் மற்றொரு அடுப்பில், வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அடுப்பில் வைத்துள்ள சூப்புடன் சேர்த்துக் கொள்ளவும்.
* பின்பு சீரகப்
பொடி, உப்பு, மிளகுத் தூள் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சூப்புடன் சேர்த்து கலந்து, மேலே சிறிது கொத்தமல்லியைத் தூவினால், சுவையான வாழைத்தண்டு சூப் தயார்.
No comments:
Post a Comment