sprouted-whole-green-gram-gravy-recipe முளைக்கட்டிய பச்சை பயறு கிரேவி - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Monday 30 August 2021

sprouted-whole-green-gram-gravy-recipe முளைக்கட்டிய பச்சை பயறு கிரேவி

Sprouted Whole Green Gram Gravy Recipe In Tamil

முளைக்கட்டிய பச்சை பயறு கிரேவி


தேவையான பொருட்கள்:

* பச்சை பயறு/பாசி பயறு - 1/2 கப்

தேங்காய் மசாலாவிற்கு...

* துருவிய தேங்காய் - 1/2 கப்

* வரமிளகாய் - 2

* புளி பேட் - 1/4 டீபூன்

* தேங்காய் எண்ணெய் - 2 டீபூன்

* கடுகு - 1 டீபூன்

* கறிவேப்பிலை - சிறிது

* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் பச்சை பயறு அல்லது பாசி பயறை நீரில் போட்டு ஒரு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

* பின் அதை நன்கு நீரில் கழுவி, ஒரு ஈரமான துணியில் போட்டு கட்டி தொங்க விடவும். மறுநாள் பாசி பயறு முளைக்கட்டியிருக்கும். இப்போது அதை மீண்டும் நீரில் 2 மணிநேரம் ஊற வைத்து, நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் முளைக்கட்டிய பச்சை பயறை சேர்த்து, சிறிது நீர் ஊற்றி, குக்கரை மூடி ஒரு விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும்.


* அதே சமயம் மிக்சர் ஜாரில் தேங்காய், வரமிளகாய் மற்றும் புளியைப் போட்டு சிறிது நீர் ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதை குக்கரில் உள்ள முளைக்கட்டிய பச்சை பயறுடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

* அடுத்து மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, குக்கரில் உள்ள கிரேவியுடன் சேர்த்து கிளறினால், முளைக்கட்டிய பச்சை பயறு கிரேவி தயார்.

No comments:

Post a Comment