சுவையான... வரமிளகாய் சட்னி
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* சின்ன வெங்காயம் - 1/2 கப்
* தக்காளி - 1
* வரமிளகாய் - 2
* காஷ்மீரி மிளகாய் - 2
புளி - 1 சிறு துண்டு
* கல் உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
* பின் மிக்சர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு, சிறிது நீர் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.
* பின்பு ஒரு வாணலிய
ை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள்.
* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள வெங்காய மிளகாய் விழுதை சேர்த்து நன்கு கிளறி, 10 நிமிடம் மூடி வைத்து குறைவான தீயில் பச்சை வாசனை போக கொதிக்க வையுங்கள்.
* சட்னியில் இருந்து பச்சை வாசனை போனதும், மீண்டும் ஒரு 3-5 நிமிடம் எண்ணெய் மேலே மிதக்க ஆரம்பிக்கும் வரை வேக வைத்து இறக்கினால், வரமிளகாய் சட்னி தயார்.
குறிப்பு:
* நீங்கள் வேண்டுமானால், இந்த சட்னிக்கு சாதாரண வரமிளகாயைப் பயன்படுத்தலாம். ஆனால் காஷ்மீரி வரமிளகாயை பயன்படுத்தினால், நல்ல
சிவப்பு நிறம் கிடைப்பதோடு, சட்னியின் காரமும் குறைவாக இருக்கும்.
* இந்த சட்னிக்கு நல்லெண்ணெயை தான் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் இது தான் இந்த சட்னியின் சுவைக்கு முக்கிய காரணம்.
No comments:
Post a Comment