இலங்கை ஸ்பெஷல் கத்திரிக்காய் கிரேவி
தேவையான பொருட்கள்:
* பெரிய கத்திரிக்காய் - 1
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் (பொரிப்பதற்கு)
மசாலாவிற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 3
* கடுகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* புளி பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* கெட்டியான தேங்காய் பால் - 200 மிலி
* தண்ணீர் - 250 மிலி
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.
* பின் கத்திரிக்காயை கழுவி, 2 இன்ச் நீளமுள்ள மெல்லியத் துண்டுகளாக வெட்டிக் கொண்டு, நிறம் மாறாமல் இருக்க உப்பு கலந்த நீரில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு
தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கத்திரிக்காயைப் போட்டு, சிறிது உப்பு தூவி, பொன்னிறமாக வறுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளித்து, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பின் இஞ்சி, பூண்டு, வெங்காயத்தைப் போட்டு, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
* பின் அதில் தக்காளியைப் போட்டு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து, தக்காளி மென்மையாக வேகும் வரை வதக்கவும்.
* அடுத்து அதில் உப்பு, கரம் மசாலா, புளி பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். இப்போது தேங்காய் பால் மற்றும் நீரை ஊற்றி, மூடி வைத்து,
கெட்டியாகும் வரை நன்கு கொதிக்க வைத்து, உப்பு சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து கிளறி, இறுதியில் வறுத்து வைத்துள்ள கத்திரிக்கயை சேர்த்து 5 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான இலங்கை கத்திரிக்காய் கிரேவி தயார்.
No comments:
Post a Comment