tomato-thokku-recipe-for-chapathi- சுவையான... தக்காளி தொக்கு - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Tuesday, 31 August 2021

tomato-thokku-recipe-for-chapathi- சுவையான... தக்காளி தொக்கு

Tomato Thokku Recipe For Chapathi In Tamil

சுவையான... தக்காளி தொக்கு

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 3-4 டேபிள் ஸ்பூன்

* கடுகு - 1/2 டீஸ்பூன்

* சோம்பு - 1 டீஸ்பூன்

* பட்டை - 1

* கிராம்பு - 2

* ஏலக்காய் - 2

* வெங்காயம் - 3

* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

* பச்சை மிளகாய் - 2

* கறிவேப்பிலை - சிறிது

* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

* கரம் மசாலா - 1 டீஸ்பூன்

* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்

* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

* தக்காளி - 2

* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு ஒருமுறை வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, சிறிது உப்பு தூவி, நன்கு வெங்காயம் வதங்கும் வரை வதக்க வேண்டும்.


* பின்பு அதில் மஞ்சள் தூள், கரம் மசாலா, மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து ஒருமுறை நன்கு கிளறி விட வேண்டும்.

* பிறகு தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு தூவி, வேண்டுமானால் சிறிது நீர் தெளித்து ஒருமுறை கிளறி விட்டு, 15 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.

* தக்காளி நன்கு வதங்கி, தொக்கில் இருந்து எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும் போது, அடுப்பை அணைத்துவிட்டு, மேலே சிறிது கறிவேப்பிலையைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான தக்காளி தொக்கு தயார்.

No comments:

Post a Comment