thengai-paal-puli-kuzhambu-recipe(ருசியான... தேங்காய் பால் புளிக்குழம்பு) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Monday, 16 August 2021

thengai-paal-puli-kuzhambu-recipe(ருசியான... தேங்காய் பால் புளிக்குழம்பு)

 Thengai Paal Puli Kuzhambu Recipe In Tamil

ருசியான... தேங்காய் பால் புளிக்குழம்பு


தேவையான பொருட்கள்:

* நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்


* கடுகு - 1 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

* வெந்தயம் - 1/2 டீஸ்பூன்

* சீரகம் - 1 டீஸ்பூன்

* கறிவேப்பிலை - சிறிது

* சின்ன வெங்காயம் - 10

* பூண்டு - 10 பல்

* குழம்பு மசாலா பவுடர் - 2-4 டேபிள் ஸ்பூன்

* உப்பு - சுவைக்கேற்ப

* வெல்லம்/சர்க்கரை - 1 டீஸ்பூன்

* புளி - 1 சிறு எலுமிச்சை அளவு

* கெட்டியான தேங்காய் பால் - 1 கப்

செய்முறை:

* முதலில் புளியை நீரில் ஊற வைத்து, பிசைந்து வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின்னர் அதில் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

* பின்பு உப்பு, குழம்பு மிளகாய் பவுடர் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.

* பிறகு அதில் புளிச்சாறு, தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து கிளறி குறைவான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

* பின் அதில் தேங்காய் பால் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான தேங்காய் பால் புளிக்குழம்பு தயார்.

No comments:

Post a Comment