தாய் பேசில் சிக்கன்
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 300 கிராம்
* முட்டை - 1
* சோள மாவு - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - சுவைக்கேற்ப
* துளசி இலைகள் - 5
* சிவப்பு மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது)
*
பச்சை குடைமிளகாய் - 1 (சற்று நீளமாக நறுக்கியது)
* எண்ணெய் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
சாஸ் தயாரிப்பதற்கு...
* சில்லி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
* சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி கெட்சப் - 1 டீஸ்பூன்
* சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 1 கப்
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் சோள மாவு, உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
* பின்பு அத்துடன் சிக்கன் துண்டுகளை சேர்த்து, சிறிது நீர் தெளித்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.
* சிக்கனைப் பிரட்டிய முட்டை கலவை மிகவும் கெட்டியாகவும் இருக்கக்கூடாது, மிகவும் நீராகவும் இருக்கக்கூடாது, ஓரளவு பதத்தில் சிக்கனுக்கு நல்ல கோட்டிங் கொடுக்கும் வகையில் இருக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சிக்கன் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
சாஸ்
தயாரிக்கும் முறை..
* மிக்சர் ஜாரில், சிவப்பு மிளகாய், பூண்டு ஆகியவற்றைப் போட்டு நீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பௌலில் சாஸ் தயாரிப்பதற்கு கொடுத்துள்ள சில்லி சாஸ், சோயா சாஸ், சோள மாவு மற்றும் அரை கப் நீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு சாஸ்பேனை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் அரைத்து வைத்துள்ள
மிளகாய் பூண்டு விழுதையும் சேர்த்து வதக்கி, பின் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் சாஸ் கலவையை ஊற்றி நன்க கிளறி விட வேண்டும். சாஸ் கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி, இறுதியாக துளசி இலைகளை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான தாய் பேசில் சிக்கன் தயார்.
No comments:
Post a Comment