'Tam' Biryani ('தம்' பிரியாணி) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Monday 9 August 2021

'Tam' Biryani ('தம்' பிரியாணி)

'Tam' Biryani  ('தம்' பிரியாணி)



தேவையானவை பாசுமதி அரிசி - 2 கப். பெரிய வெங்காயம் 2. தக்காளி4 பச்சை மிளகாய் - 2. புளித்த தயிர் அரை கப், எலுமிச்சம்பழர் ஈாறு 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள் ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், புதினா, மல்லித்தழை தலா ஒரு கைப்பிடி உப்பு - தேவையான அளவு, கேரட் - 1, உருளைக்கிழங்கு 1. பட்டாணி - ஒரு கைப்பிடி வெண்ணெய் 50 கிராம், முந்திரி விழுது - 1 டேபிள்ஸ்பூன் தானிக்க: பட்டை - ஒரு நுண்டு, லவங்கம் 3, ஏலக்காய் - 4, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,

செய்முறை அரிசியைக் கழுவி, ஊறவையுங்கள் காய்கறிகளை நறுக்கி, பச்சை மிளகாயைக் கீறி புதினா, மல்லித்தழையை ஆய்ந்து வைத்துக் கொள்ளுங்கள். குக்கரில் எண்ணெய் ஊற்றி, பட்டை, லவங்கம் நாளித்து, நறுக்கிய வெங்காயம், இஞ்சி + பூண்டு விழுது சேருங்கள். வெங்காயம் வதங்கும்போது வெண்ணெய் சேருங்கள். அத்துடன் காய்கறிகள், புதினா, மல்லித்தழை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள் பிறகு, தயிர், முந்திரி விழுது சேர்த்து சிறு தீயில் எண்ணெய் பிரியும்வரை கொதிக்கவிடுங்கள். இன்னொரு அடுப்பில் மற்றொரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவைத்து, ஊறவைத்த அரிசியை தண்ணீரை வடித்துவிட்டு அநில போடுங்கள். உப்பு சோதது அரைப்பதமாக வெந்ததும் வடித்துவிடுங்கள்.

எண்ணொய் பிரிந்தபிறகு, அரை வேக்காடு சாதத்தை அதில் கொட்டி அப்படியே லேசாக அழுத்திவிட்டு, ஒரு டாக்கி டவலை நணைத்துப் பிழிந்து பிரியாணி பாத்திரத்தின் வாயை மூடி, சுற்றிக் சுட்டுங்கள். பிறகு, ஒரு தட்டால் மூடிவிட்டு அடுப்பை 'ஸிம்மில் வையுங்கள். மூடி மேலே ஏதாவது கனமான பொருளைத் தூக்கி வைத்துவிடுங்கள். இது ஒரு விதமான 'தம்' போடும் முறை. இன்னொரு முறை அடுப்பை 'ஸிம்மில் வைத்து, அதன் மேல் தோசைக்கல்லைக் காயவையுங்கள். பிரியாணி பாத்திரத்தை அதன் மேல் வைத்து, பொருத்தமான தட்டால் மூடி, மேலே வெயிட் வையுங்கள். 20 நிமிடங்கள் இப்படி 'தம்' போட்டால் போதும். இந்த முறையில், அடிப்பிடிக்காது வெப்பம் ஒரே சீராகப் பரவும். 3-வது முறை கோதுமை மாவைப் பிசைந்துகொள்ளுங்கள். பிரியாணி பாத்திரத்தை தட்டு போட்டு மூடிவிட்டு, தட்டைச் சுற்றி விளிம்பை, எண்ணெய்ப் பிசுக்கு இல்லாமல் நண்ணீர் தொட்டு துடைத்துவிடுங்கள் பிசைந்துவைத்திருக்கும் மாவை சீல் போட்ட மாதிரி, பாத்திரத்தின் விளிம்பை சுற்றி ஒட்டிவிடுங்கள். மேல்புறம் வெயிட் வைத்துவிடுங்கள்.

No comments:

Post a Comment