Paneer Pulavu (பனீர் புலவு )
தேவையானவை) பாசுமதி அரிசி - 2 கப், பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 3. பனீர் 200 கிராம். இஞ்சி பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள் ஒரு டீஸ்பூன் (அல்லது) பச்சை மிளகாய் - 3, உப்பு - தேவையான அளவு, மஞ்சள்தூள் கால் டீஸ்பூள். எலுமிச்சம்பழச் சாறு - 2. டேபிள்ஸ்பூன். தாளிக்க நெய் 2 டேபிள்ஸ்பூன் எண்னொய் - ஒரு டேபிள்ஸ்பூன், பட்டை லவங்கம், ஏலக்காய் தலா - 2. சீரகம் - அரை டீஸ்பூன்,
செய்முறை பாசுமதி அரிசியைக் கழுவி, 3 கப் தண்ணீரில் ஊறவையுங்கள். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்குங்கள். தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். பனீரை சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். குக்கரில் எண்ணொய். நெய்யைக் காயவைத்து தாளிக்கும் பொருட்களைப் போட்டுத் தாளித்து, வெங்காயம், மஞ்சள்தூள், சிட்டிகை உப்பு சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது, பளீர் துண்டுகள் சேர்த்து பச்சை
வாசனை போக வதக்குங்கள். பிறகு, நக்காளி, மிளகாய்தூள், எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து ஐந்து
நிமிடம் வதக்கி, (மிளகாய்தூளுக்கு பதில், பச்சை மிளகாய் சேர்ப்பதானால் இப்போது சேர்க்கலாம்).
ஊறவைத்த அரிசியை தண்ணீருடன் சேர்த்து, உப்பு போட்டு, குக்கரை மூடுங்கள். ஒரு விசில்
வந்ததும், தீயை நன்கு குறைத்து, ஐந்து நிமிடம் கழித்து இறக்குங்கள். குசியான பனீர் புலவு ரெடி,
No comments:
Post a Comment