ramadan-special-chicken-meatball-soup-recipe ரமலான் ஸ்பெஷல் - சிக்கன் மீட்பால் சூப் - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Saturday 21 August 2021

ramadan-special-chicken-meatball-soup-recipe ரமலான் ஸ்பெஷல் - சிக்கன் மீட்பால் சூப்

Ramadan Special Chicken Meatball Soup Recipe In Tamil

ரமலான் ஸ்பெஷல் - சிக்கன் மீட்பால் சூப்


தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 1 டீஸ்பூன்

* சீரகம் - 1/2 டீஸ்பூன்

* இஞ்சி - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* பூண்டு - 2 பல் (பொடியாக நறுக்கியது)

* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)

* தண்ணீர் - 4 கப்

* சிக்கன் சூப் க்யூப் - 1 துண்டு

* சோயா சாஸ் - 1 டீஸ்பூன்

* தக்காளி கெட்சப் - 1 டீஸ்பூன் (விருப்பமிருந்தால்)

* உப்பு - சுவைக்கேற்ப

* மிளகுத் தூள் - சுவைக்கேற்ப

* சோள மாவு - 1 டீஸ்பூன் (நீரில் கலந்து கொள்ளவும்)

* எலுமிச்சை சாறு - தேவையான அளவு

மீட்பால் செய்வதற்கு...

* சிக்கன் கொத்துக்கறி - 1 கப்

* வெங்காயம் - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

* பிரட் தூள் - 3 டேபிள் ஸ்பூன்

* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் முதலில் மீட்பால் செய்வதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒரு பௌலில் போட்டு நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

* பின் அதை சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், மீட்பால் உருண்டைகளைப் போட்டு, 8-10 நிமிடம் வேக வைத்து பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு அதே வாணலியில் சீரகம், இஞ்சி, பூண்டு, கேரட் ஆகியவற்றைப் போட்டு ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

* பின்னர் அதில் நீரை ஊற்றி, சிக்கன் சூப் க்யூப் சேர்த்து நன்கு 5 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும் .

* பின் அதில் உப்பு, மிளகுத் தூள், சோயா சாஸ் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* இப்போது அதில் மீட்பால் சேர்த்து குறைவான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைத்து, பின் நீரில் கரைத்த சோள மாவு சேர்த்து கிளறி விட வேண்டும். இதனால் சூப் சற்று கெட்டியாகும்.

* இறுதியில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து இறக்கினால், சுவையான சிக்கன் மீட்பால் சூப் தயார்.

No comments:

Post a Comment