பிச்சுப்போட்ட கோழி வறுவல்
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 500 கிராம்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
*
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் சிக்கனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் கழுவிய சிக்கனை குக்கரில்
போட்டு, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மூடி அடுப்பில் வைத்து, 4-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து, எலும்பில் உள்ள சிக்கனின் சதைப்பகுதியை கையால் பிய்த்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்னர் மிளகுத் தூளைத் தவிர, மிளகாய் தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு கிளறி விட வேட்ணடும்.
* பின் சிக்கனைப் போட்டு நன்கு கிளறி, மேலே மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான பிச்சுப்போட்ட கோழி வறுவல் தயார்.
No comments:
Post a Comment