கசகசா பாயாசம்
தேவையான பொருட்கள்:
* கசகசா விதைகள் - 3 டேபிள் ஸ்பூன்
* பச்சரிசி - 1 டேபிள் ஸ்பூன்
* தேங்காய் - 1/2 கப்
* வெல்லம் - 3/4 கப்
* தண்ணீர் - 1 1/2 கப்
* ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் பச்சரிசியை மற்றும் கசகசாவை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர்
வறுத்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் தேங்காய் மற்றும் சிறிது நீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் நீரை ஊற்றி, வெல்லத்தை முற்றிலும் உருக வைத்து இறக்கி வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
* பிறகு வெல்லப் பாகை அரைத்து வைத்துள்ள கசகசா விழுதை சேர்த்து அடுப்பில் வைத்து கட்டிகளின்றி நன்கு கிளறி, 10-15 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். இந்த நேரத்தில் பாயாசமானது சற்று கெட்டியாக ஆரம்பிக்கும்.
* பின் சிறு வாணலியை அடுப்பில் வைத்து,
அதில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, பாயாசத்தில் ஊற்றி, அத்துடன் ஏலக்காய் பொடியை சேர்த்து நன்கு கிளறிவிட்டு இறக்கினால், சுவையான கசகசா பாயாசம் தயார்.
குறிப்பு:
* பாயாசம் மிகவும் கெட்டியாகிவிட்டால், அத்துடன் காய்ச்சிய பாலை தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளலாம்.
* உங்களுக்கு இனிப்பு குறைவாக அல்லது அதிகமாக வேண்டுமானால், அதற்கு ஏற்ப வெல்லத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
* ஒருவேளை உங்கள் வீட்டில் வெல்லம் இல்லாவிட்டால், அதற்கு பதிலாக சர்க்கரையை சேர்த்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment