Peanuts - Cheese biryani (வேர்க்கடலை - சீஸ் பிரியாணி )
தேவையானவை: பாஸ்மதி அரிசி - ஒரு கப், துருவிய சீஸ் - அரை கப், பாசை வேர்க்கடலை அரை கப், பட்டை - ஒரு அங்குலத் துண்டு, கிராம்பு 3, பிரியாணி இலை - ஒன்று, வெங்காயம் - 3, மிளகுத்தூள் - ஒரு டீஸ்புன், துருவிய மாங்காய் கால் கப், பச்சை மிளகாய் - 4 (வட்டமாக நறுக்கவும்), எண்ணெய், நெய், உப்பு - சிறிதளவு,
செய்முறை: அரிசியைக் கழுவி 10 நிமிடம் ஊற வைத்து நீரை வடிக்கவும். வானாலியில் நெய் விட்டு சூடாக்கி அரிசியை சில நிமிடங்கள் வறுந்துக் கொள்ளவும், குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை தாளித்து, நறுக்கிய வெங்காயம், வட்டமாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும், இதனுடன் உப்பு, மாங்காய்த் துருவல், பச்சை வேர்க்கடலை போட்டுப் புரட்டி
தேவையான நீர் விட்டு, ஒரு கொதி வந்ததும் அரிசி சேர்த்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும், ஆலி விட்டதும் குக்கரைத் திறந்து, நுருவிய சீஸ் தூவி, மிளகுத்தூள் சேர்த்துக் கிளறி சூடாகப் பரிமாறவும்,
No comments:
Post a Comment