paneer-65-recipe மொறுமொறுப்பான... பன்னீர் 65 - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Friday, 20 August 2021

paneer-65-recipe மொறுமொறுப்பான... பன்னீர் 65

Paneer 65 Recipe In Tamil

மொறுமொறுப்பான... பன்னீர் 65



நீங்கள் பன்னீர் பிரியரா? உங்களுக்கு பன்னீர் கொண்டு வித்தியாசமான ரெசிபிக்களை செய்து சுவைக்க பிடிக்குமா? அதுவும் உங்களுக்கு பன்னீரைக் கொண்டு ஸ்நாக்ஸ் செய்ய வேண்டுமா? அப்படியானால் பன்னீர் 65 செய்து சாப்பிடுங்கள். இது பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாகவும், மொறுமொறுப்பாகவும் இருக்கும். உங்களுக்கு பன்னீர் 65 எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?


கீழே பன்னீர் 65 ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.


தேவையான பொருட்கள்:

ஊற வைப்பதற்கு...

* பன்னீர் - 200 கிராம்

* இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்

* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

* தயிர் - 1 டேபிள் ஸ்பூன்

* உப்பு - சுவைக்கேற்ப

மாவிற்கு...

* மைதா - 3 டேபிள் ஸ்பூன்

* சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்

* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

* சமையல் சோடா - 1 சிட்டிகை

* உப்பு - சுவைக்கேற்ப

* தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பௌலில் பன்னீர் துண்டுகளை எடுத்துக் கொண்டு, அத்துடன் 'ஊற வைப்பதற்கு' கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.

* மற்றொரு பௌலில் 'மாவிற்கு' கொடுத்துள்ள பொருட்களை எடுத்து நன்கு கலந்து, பின் சிறிது நீர் ஊற்றி ஓரளவு கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும். மாவானது மிகவும் நீராகவோ அல்லது கெட்டியாகவோ இருக்கக்கூடாது. இட்லி மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.


* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

* எண்ணெய் சூடானதும், ஊற வைத்துள்ள சில பன்னீர் துண்டுகளை தயாரித்து வைத்துள்ள மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

* இதேப் போல் அனைத்து பன்னீர் துண்டுகளையும் பொரித்து எடுத்தால், மொறுமொறுப்பான பன்னீர் 65 தயார்.

குறிப்பு:

* பன்னீர் துண்டுகளானது மசாலாவில் நன்கு ஊறி இருக்க வேண்டும்.


* அனைத்து பன்னீர் துண்டுகளையும் ஒரே நேரத்தில் மாவில் போட்டு விட வேண்டாம். இல்லாவிட்டால், பன்னீர் எளிதில் உடைத்துவிடும்.

* உங்களுக்கு மைதா சேர்க்க பிடிக்காவிட்டால், அதற்கு பதிலாக சோள மாவு மற்றும் அரிசி மாவு பயன்படுத்திக் கொள்ளலாம்.

* சமையல் சோடா சேர்க்க தவிர்க்க வேண்டாம். ஏனெனில் அது தான் நல்ல அமைப்பைத் தரும். சமையல் சோடா சேர்க்காமல் செய்தால், பன்னீர் 65 சற்று கடினமாக இருக்கும்.

No comments:

Post a Comment