காலிஃப்ளவர் பாப்கார்ன்
உங்கள் வீட்டில் காலிஃப்ளவர் உள்ளதா? உங்களுக்கு மாலை வேளையில் சூடாகவும், மொறுமொறுப்பாகவும் ஒரு சுவையான ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டுமா? அப்படியானால் காலிஃப்ளவர் கொண்டு பாப்கார்ன் செய்து சாப்பிடுங்கள். இந்த காலிஃப்ளவர் பாப்கார்னை தக்காளி
சாஸ் உடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.
உங்களுக்கு வீட்டிலேயே காலிஃப்ளவர் பாப்கார்ன் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காலிஃப்ளவர் பாப்கார்னின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காலிஃப்ளவர் - 1 (சிறியது)
* ஐஸ் கட்டி தண்ணீர்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
ஊற வைப்பதற்கு...
* மோர் - 1/2 கப்
* சோயா சாஸ் - 1/4 டீஸ்பூன்
* சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
மாவிற்கு...
* கோதுமை மாவு - 1 கப்
* சோள மாவு - 1/2 கப்
* பூண்டு பவுடர் - 1 டீஸ்பூன்
* வெங்காய பவுடர் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி, காலிஃப்ளவர் துண்டுகளைப் போட்டு மூடி 5-10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் நீரை வடிகட்டி விட்டு, குளிர்ந்த
நீரால் ஒருமுறை அலசிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அந்த காலிஃப்ளவர் துண்டுகளை ஒரு பௌலில் எடுத்து, அதில் 'ஊற வைப்பதற்கு' கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு கிளறி, 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மற்றொரு பௌலில் 'மாவிற்கு' கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து கிளறிக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஊற வைத்துள்ள காலிஃப்ளவர் துண்டுகளை தயாரித்து வைத்துள்ள மாவில் போட்டு பிரட்டி, பின் ஐஸ் தண்ணீரில் போட்டு உடனே எடுத்து விட வேண்டும்.
* அதன் பின் மீண்டும் மாவில் பிரட்டி தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை
அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், காலிஃப்ளவர் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், கோபி பாப்கார்ன் தயார்.
No comments:
Post a Comment