mushroom-pasta-recipe மஸ்ரூம் பாஸ்தா - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Monday, 30 August 2021

mushroom-pasta-recipe மஸ்ரூம் பாஸ்தா

Mushroom Pasta Recipe In Tamil

மஸ்ரூம் பாஸ்தா


தேவையான பொருட்கள்:

* பாஸ்தா - 3/4 கப்

* மஸ்ரூம்/காளான் - 1/4 கப்

* குடைமிளகாய் - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* பூண்டு - 1/2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* உலர்ந்த கற்பூரவள்ளி இலை - ஒரு சிட்டிகை

* மிளகுத் தூள் - 1/8 டீஸ்பூன்

* துருவிய சீஸ் - 1 டேபிள் ஸ்பூன்

* மைதா - 1 டேபிள் ஸ்பூன்

* பால் - 1/2 கப்

* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்

* உப்பு - சுவைக்கேற்ப

* வெண்ணெய் - 1/2 டேபிள் ஸ்பூன்

* எண்ணெய் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் கொதிக்கும் நீரில் பாஸ்தாவைப் போட்டு, அதில் அரை டீஸ்பூன் எண்ணெய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து, மென்மையாக வேக வைத்து இறக்கிக் கொள்ளவும். பின் நீரை முற்றிலும் வடிகட்டிவிட்டு, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.


* பின்பு அதில் குடைமிளகாய் மற்றும் காளானை சேர்த்து கிளறி நன்கு காளான் வேகும் வரை ஒரு 3 நிமிடம் வேக வைக்கவும்.

* பின் அதில் மைதாவை சேர்த்து ஒருமுறை கிளறிவிட்டு, பால் ஊற்றி நன்கு கிளறி விடவும். அப்போது கலவையானது சற்று கெட்டியாகி இருக்கும். இந்நிலையில் அதில் உலர்ந்த கற்பூரவள்ளி இலைகளை சேர்த்து கிளறி விடவும்.

* இறுதியில் வேக வைத்துள்ள பாஸ்தாவை சேர்த்து கிளறி, பின் அதில் மிளகுத் தூள் சேர்த்து ஒருமுறை பிரட்டி விட்டு, மேலே சீஸ் தூவி ஒருமுறை கிளறிவிட்டு இறக்கினால், சுவையான மஸ்ரூம் பாஸ்தா தயார்.

No comments:

Post a Comment