strawberry-muffins-recipe- ஸ்ட்ராபெர்ரி மஃபின் - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Monday, 30 August 2021

strawberry-muffins-recipe- ஸ்ட்ராபெர்ரி மஃபின்

Strawberry Muffins Recipe In Tamil

ஸ்ட்ராபெர்ரி மஃபின்

தேவையான பொருட்கள்:

* மைதா - 2 கப் (240 கிராம்)

* சர்க்கரை - 1 கப் (200 கிராம்)

* உப்பில்லாத வெண்ணெய் - 1/2 கப் (120 கிராம்)

* வென்னிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்

* பெரிய முட்டை - 2

* பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன்

* உப்பு - 1/4 டீஸ்பூன்

* பால் - 1/2 கப் (120 மிலி)

* ஸ்ட்ராபெர்ரி பழங்கள் - 1 கப் (நறுக்கியது)

செய்முறை:

* முதலில் மைக்ரோஓவனை 190 டிகிரி C-ல் சூடேற்றிக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு மஃபின் ட்ரேயில் கப் கேக் லைனரை அடுக்கி வைக்க வேண்டும்.

* பின்பு ஒரு அகலமான பௌலில் வெண்ணெய், சர்க்கரை, வென்னிலா எசன்ஸ் போட்டு எலக்ட்ரிக் பீட்டர் கொண்டு நன்கு க்ரீமியாக வரும் வரை அடித்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு அதில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, அதையும் நன்கு அடித்துக் கொள்ளவும்.


* பின்னர் அதில் மைதா, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து பீட்டர் கொண்டு கலந்து கொள்ள வேண்டும்.

* அடுத்து, அதில் சிறிது பால் சேர்த்து பீட்டரால் நன்கு க்ரீமி போன்று அடித்துக் கொள்ளவும்.

* பின் அதில் ஸ்ட்ராபெர்ரி பழங்களை சிறிது சேர்த்து மெதுவாக பிரட்டி விடவும்.

* பின்பு ஒரு ஐஸ்க்ரீம் ஸ்கூப் பயன்படுத்தி, கலவையை கப் கேக் லைனரில் வைத்து, அவற்றின் மேல் நறுக்கிய ஸ்ட்ராபெர்ரிகளை வைத்து, ஓவனில் வைத்து, 30 நிமிடம் பேக் செய்து இறக்கினால், சுவையான ஸ்ட்ராபெர்ரி மஃபின் தயார்.

No comments:

Post a Comment