murungai-keerai-soup-recipe முருங்கைக் கீரை சூப் - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Tuesday 31 August 2021

murungai-keerai-soup-recipe முருங்கைக் கீரை சூப்

Murungai Keerai Soup Recipe In Tamil

முருங்கைக் கீரை சூப்


தேவையான பொருட்கள்:

* முருங்கைக்கீரை - 1 1/2 கப்

* சீரகம் - 1/2 டீஸ்பூன்

* நறுக்கிய பூண்டு - 1 டேபிள் ஸ்பூன்

* சின்ன வெங்காயம் - 6 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி - 1 (நறுக்கியது)

* தண்ணீர் - 2 கப்

* உப்பு - சுவைக்கேற்ப

* மிளகுத் தூள் - சுவைக்கேற்ப

* எண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் முருங்கைக்கீரையை நீரில் இரண்டு முறை நன்கு அலசி, நீரை வடிகட்டிவிட்டு தனியாக வைத்துக் கொள்ளவும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளிக்கவும்.


* பின்பு பூண்டு சேர்த்து வதக்கி, வெங்காயத்தைப் போட்டு, சிறிது உப்பு தூவி பொன்னிறமாக வதக்கவும்.

* அடுத்து தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகி பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

* பிறகு கழுவி வைத்துள்ள முருங்கைக்கீரையை சேர்த்து 2-3 நிமிடம் பச்சை வாசனை போக வதக்கவும்.

* பின் வதக்கியதை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, 5 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.

* சூப்பானது நன்கு கொதித்த பின், சுவை பார்த்து வேண்டுமானால் உப்பு சேர்த்து, பின் மிளகுத் தூள் தூவி ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான முருங்கைக்கீரை சூப் தயார்.


குறிப்பு:

* 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு முருங்கைக்கீரை சூப் கொடுப்பதாக இருந்தால், சூப்பை வடிகட்டி, வெறும் நீரை மட்டும் கொடுக்கலாம்.

* முருங்கைக்கீரையை அரைத்து பயன்படுத்த வேண்டாம். இல்லாவிட்டால் சூப் கசப்பாக இருக்கும்.

* முருங்கைக்கீரையை எப்போதுமே மரத்தில் இருந்து பிடுங்கிய அன்றே அல்லது மறுநாள் பயன்படுத்திவிட வேண்டும்.

* இன்னும் சுவையான முருங்கைக்கீரை சூப் வேண்டுமானால், இத்துடன் 1/4 கப் தேங்காய் பால் அல்லது பருப்பு வேக வைத்த நீரை சேர்த்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment