லெமன் பெப்பர் சிக்கன்
தேவையான பொருட்கள்:
சிக்கனுக்கு...
* எலும்பில்லாத சிக்கன் - 500 கிராம்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகு தூள் - சுவைக்கேற்ப
* முட்டை - 1
* மைதா - 1/4 கப்
* சோள மாவு - 1/4 கப்
* எண்ணெய் - பொரிப்பதற்கு
சாஸ் செய்வதற்கு...
* எலுமிச்சை சாறு - 3 டேபிள் ஸ்பூன்
* சோயா சாஸ் - 3 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 2 டீஸ்பூன் (துருவியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* சோள மாவு - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/2 கப்
செய்முறை:
* முதலில் சிக்கனை நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பௌலில் சிக்கனைப் போட்டு, அதில் மிளகுத் தூள், உப்பு, முட்டை, மைதா, சோள மாவு சேர்த்து நன்கு பிசைந்த
ு கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரட்டி வைத்துள்ள சிக்கனை போட்டு பொன்னிறமாக பொரித்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
* பிறகு ஒரு பௌலில் சாஸ் செய்வதற்கு கொடுத்துள்ள பொருட்களான எலுமிச்சை சாறு, சோயா சாஸ், பூண்டு, உப்பு, சர்க்கரை, மிளகுத் தூள், சோள மாவு, தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
பொரித்து வைத்துள்ள சிக்கனைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கி, பின் பௌலில் வைத்துள்ள சாஸை சேர்த்து நன்கு கிளறி, 3-5 நிமிடம் குறைவான தீயில் கிளறி விட்டு இறக்கினால், சுவையான லெமன் பெப்பர் சிக்கன் ரெடி!
No comments:
Post a Comment